Visakhapatnam: திடீரெனத் தீப்பிடித்து எரிந்த படகுகள்!

நள்ளிரவு துறைமுகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சிஅடைத்தனர்.

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் மீனவர்களின் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் நேற்று நள்ளிரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு படகிலிருந்து பரவிய தீ, அடுத்தடுத்து மற்ற படகுகளுக்குப் பரவிப் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

தகவலறிந்து 4-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், துறைமுக அதிகாரிகள் தீயைக் கட்டுக்குள் கொண்டுவர போராடி வருகின்றனர். படகில் வைத்திருந்த எல்பிஜி சிலிண்டர்கள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 50-க்கும் மேலான படகுகள் எரிந்ததால் மீனவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *