Young Woman Rape: மயக்க மருந்து கொடுத்து இளம்பெண் பாலியல் பலாத்காரம்!

Young Woman Rape
Advertisements

குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து இளம்பெண்ணைக் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

சென்னை: சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த 35 வயதான இளம்பெண் ஒருவர் அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

எனக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்து விட்டார். எனது உறவினர்களுடன் தனியாக வசித்து வருகிறேன். அண்ணாநகரில் உள்ள தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். என்னுடன் அதே நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் முகப்பேரைச் சேர்ந்த சத்யஜித் (35) என்பவருடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

சத்யஜித் என்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி நம்ப வைத்தார். அதனை நம்பிய நான், அவருடன் நெருங்கிப் பழகினேன். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சத்யஜித் என்னைக் கோயம்பேட்டில் உள்ள அவரது உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறினார். ஆனால் அங்குள்ள விடுதிக்கு என்னை அழைத்துச்சென்றார். அங்கு எனக்குக் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்தார். அதைக் குடித்த நான் மயங்கி விட்டேன்.

அப்போது சத்யஜித், என்னைப் பாலியல் பலாத்காரம் செய்ததுடன், அதனை அவரது செல்போனில் வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டார். பின்னர் என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுத்த அவர், நான் அழைக்கும் போதெல்லாம் என்னுடன் தனியாக வந்து தங்க வேண்டும். இல்லாவிட்டால் இந்த ஆபாச வீடியோவைச் சமூக வலைதளங்களில் பதிவேற்றி விடுவேன் என மிரட்டி வருகிறார். அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதுகுறித்து அண்ணாநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் இளம்பெண் அளித்த புகார் உண்மை என்பது தெரியவந்தது. இதையடுத்து சத்யஜித்தை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *