முதல் டி20 இந்தியா அபார வெற்றி..!

Advertisements
இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கையை வீழ்த்தி இந்திய மகளிர் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திரா மாநிலம், விசாகப்பட்டினத்தில் இந்தியா, இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கான இரண்டாவது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இந்த, போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி, இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்து, 9 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, 129 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 11 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் எடுத்து அபாரப் வெற்றி பெற்றது. இதில், அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 34 பந்தில் 69 குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பின்னர், இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி  2-0 என முன்னிலை வகிக்கிறது.
Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *