எல்.கே.அத்வானி மருத்துவமனையில் அனுமதி!

புதுடெல்லி:

பா.ஜ.க. மூத்த தலைவரும், முன்னாள் துணைப்பிரதமருமான எல்.கே.அத்வானி டெல்லி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

97 வயதான அத்வானி 2 நாட்களுக்கு முன்னர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருடைய உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலிருந்து வருவதாகவும் மருத்துவமனை தரப்பில் இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதற்கான காரணம்குறித்து எந்தவொரு தகவலும் தெரிவிக்கப்படவில்லை.

கடந்த மாதம் தனது 97வது பிறந்தநாளைக் கொண்டாடிய அத்வானி, கடந்த சில மாதங்களாகவே உடல்நலக்குறைவால் அவதிபட்டு வந்தார்.

ஜூலை முதல் அத்வானி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது நான்காவது முறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *