ஈழத்தமிழர் உரிமைகளுக்காக உயிர்நீத்த திலீபனுக்கு அவமானம் -வேல்முருகன் வேதனை.!

 தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த  திலீபனின் சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியிருப்பதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் தனது சமூக வலைத் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், தமிழர்களின் உரிமைகளுக்காகத் தனது உயிரையே தியாகம் செய்த  திலீபனின் 39 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிலையில், அவரது நினைவிடத்தில் நிறுவப்பட்டிருந்த அவரது சிலையை இலங்கை காவல்துறையினர் அகற்றியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்திய அரசு இச்சம்பவத்தை மௌனமாகக் கடந்து செல்லாமல், இலங்கை அரசாங்கத்திடம் தனது கண்டனத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். இலங்கை அரசு இச்சம்பவத்திற்கான வெளிப்படையான விளக்கத்தை அளித்து, தமிழர்களின் அமைதியான நினைவேந்தல் உரிமையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழர்களின் நினைவிலிருந்து திலீபனை அகற்ற முடியாது என்றும் ஈழத் தமிழர்களின் உரிமைகள் முழுமையாக உறுதி செய்யப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *