
யார் இந்த யெகத்ரினா டன்ட்சோவா? ரஷ்யாவின் பெண் சிங்கம்…
உக்ரைனில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் ஒரு ரஷ்ய பெண் அரசியல்வாதி இவர்.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெகத்ரினா டன்ட்சோவா உக்ரேனில் அமைதிக்கு அழைப்பு விடுப்பதோடு, ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு சவால் விடுக்கும் நபராக அறியப்படுகிறார். இவர் எப்போதும் அமைதி, நட்பு மற்றும் மரியாதை ஆகியவற்றில் ஆழமான நம்பிக்கை கொண்டவர். அதன் அடிப்படையில் அனைவருடனும் ஒத்துழைக்கத் தயாராக இருக்கும்” ஒரு “மனிதாபிமான” ரஷ்ய பிரஜை.
2022 பிப்ரவரி மாதம், முதல் ரஷ்யா உக்ரைனை “சிறப்பு ராணுவ நடவடிக்கை” எனும் பெயரில் ரஷியா ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து உக்ரைனும் எதிர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் துணையுடன் உக்ரைன், ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது. போர் தொடர்ந்த நிலையில் இரு தரப்பிலும் பலத்த கட்டிட சேதங்களும் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. போர் 635 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவித்து யெகத்ரினா டன்ட்சோவா கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் ரஷியாவில் நடைபெறும் முதல் தேர்தலாக அடுத்த வருடம் மார்ச் மாதம், அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யெகேத்ரினா டன்ட்சோவா உக்ரேனில் அமைதிக்கு அழைப்பு விடுத்தார்.
ஞாயிறன்று டன்ட்சோவா தனது வேட்பாளர் அந்தஸ்தை நோக்கி தனது முதல் அடியை எடுத்து வைத்தார், அப்போது அவரது போட்டி ரஷ்ய தேர்தல் சட்டத்தின்படி 500 ஆதரவாளர்களால் அங்கீகரிக்கப்பட்டது, மேலும் புதன்கிழமை ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்திடம் தனது வேட்புமனுவை பதிவு செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தார்.
ஆனால் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் 100 பிழைகளை ஆணையம் கண்டறிந்தது.அது மட்டுமல்ல நீ ஒரு இளம் பெண், உனக்கு முன்னால் எல்லாம் இருக்கிறது. எந்தவொரு மைனஸையும் எப்போதும் ஒரு பிளஸ் ஆக மாற்ற முடியும்” என்று ரஷ்யாவின் மத்திய தேர்தல் ஆணையத்தின் தலைவர் எல்லா பாம்பிலோவா ஆணையக் கூட்டத்தில் டன்ட்சோவாவிடம் உரையாற்றினார்.
அந்நாட்டு தேர்தல் சட்டப்படி, ஆதரவாளர்களின் கையெழுத்தை பெற வேண்டிய அடுத்த கட்டத்திற்கு யெகேத்ரினா செல்வதை தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கை மூலம் முடக்கியுள்ளது.
இந்த முடிவை எதிர்த்து ரஷிய உச்ச நீதிமன்றத்தில் முறையிட போவதாக யெகேத்ரினா தெரிவித்துள்ளார். தன்னை எதிர்ப்பவர்களை திட்டமிட்டு முடக்கும் புதினின் செயல்களுக்கு தேர்தல் ஆணையமும் துணை போவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
புதின் தனது வேட்புமனுவை மத்திய தேர்தல் ஆணையத்தில் திங்கட்கிழமை சமர்ப்பித்தார். இந்த மாத தொடக்கத்தில், டூமா 2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தேதிகளாக மார்ச் 15-17 ஐ நிர்ணயித்தது.திட்டமிட்டு உள்நோக்குடன் யெகத்ரினா டன்ட்சோவாவின் மனு நிராகரிக்கப்பதை எதிர்த்து பூ ஒன்று புயலாக மாறியுள்ளது


