Union Budget 2024:கிசான் கிரிட்டிட் கார்ட், பணிபுரியும் பெண்களுக்கு ஹாஸ்டல்!

Union Budget 2024 LIVE Updates: தேர்தல் காரணமாகப் பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட் தாக்கலான நிலையில், இன்று முழு பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

20 லட்சம் இளைஞர்களுக்கு உதவும் புதிய திறன் திட்டம் அறிவிப்பு

20 லட்சம் இளைஞர்களுக்கு உதவும் வகையில், மத்திய அரசின் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்களுக்கு 5 ஆண்டுகளுக்குத் திறன் பயிற்சி அளிக்கப்படும் மற்றும் 1,000 தொழில் பயிற்சி நிறுவனங்கள் உருவாக்கப்பட உள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு ஹாஸ்டல்

நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும் – நிர்மலா சீதாராமன்

விவசாய துறைகளுக்கு ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

நிதியமைச்சர் சீதாராமன் விவசாயம் மற்றும் அதைச் சார்ந்த துறைகளுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீட்டை வெளியிட்டார். அடக்கவிலையை காட்டிலும் 20 சதவிகித லாபத்துடன் விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படுகிறது.

கிசான் கிரிட்டிட் கார்ட் அறிமுகம் – நிர்மலா சீதாராமன்

காய்கறி உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுத்து ஊக்குவிக்கப்படும். கிசான் கிரிட்டிட் கார்ட் 5 மாநிலங்களில் முதல் கட்டமாக அறிமுகப்படுத்தப்படும் – நிர்மலா சீதாராமன்

வேலைவாய்ப்பு மற்றும் திறன் நடவடிக்கைகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி ஒதுக்கீடு

2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *