
தமிழ்நாடு அரசின் சார்பில் திருவள்ளுவர் விருது, பெருந்தலைவர் காமராசர் விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருது ஆகியவற்றைப் பெறுவோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள பட்டியலில், திருவள்ளுவர் விருது சத்தியவேல் முருகனுக்கு வழங்கப்பட உள்ளது.
பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கும், அம்பேத்கர் விருது சிந்தனைச் செல்வனுக்கும் வழங்கப்பட உள்ளன.
அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்பட உள்ளது.
பெருந்தலைவர் காமராசர் விருது இதயத்துல்லாவுக்கு வழங்கப்பட உள்ளது.
மகாகவி பாரதியார் விருது நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது யுகபாரதிக்கும் வழங்கப்பட உள்ளன.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது செல்லப்பாவுக்கும் வழங்கப்பட உள்ளன.
கருணாநிதி விருது விடுதலை விரும்பிக்கு வழங்கப்பட உள்ளது.
விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ஐந்து இலட்ச ரூபாயும், ஒரு பவுன் தங்கப் பதக்கமும், தகுதிச் சான்றும் பொன்னாடையும் வழங்கப்படும். இந்த விருதுகளைச் சனவரி 16 திருவள்ளுவர் திருநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



