பாஜக கவுன்சிலர் ரமேஷ் காலமானார்!

Advertisements

நாகர்கோவில் அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் ரமேஷ் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த இவர்நாகர்கோவில் மாநகராட்சி 52 ஆவது வார்டு கவுன்சிலராக உள்ளார்.

இவர் இரவில் தனது வீட்டின் மாடியில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததில் ரமேஷ் படுகாயம் அடைந்தார். தொடர்ந்து ரமேஷ் இறந்தது குறித்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பின்னர், ரமேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து, பாஜக கவுன்சிலர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *