Switzerland : உடைந்த அமைதி ஒப்பந்தம்.! ஈரான் திடீர் வெளிநடப்பு.!

Advertisements

சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற அமெரிக்கா – ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தப் பேச்சுவார்த்தை அரங்கில் இருந்து, ஈரானிய பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.

சுவிட்சர்லாந்தில் அமெரிக்கா-ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், அமெரிக்காவின் சார்பில் துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அதிபர் டிரம்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காப், அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர் ஆகியோரும், ஈரானின் சார்பில் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப், வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மேலும், பேச்சுவார்த்தைக்கு ஆதரவாகப் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், ராணுவத் தளபதி ஆசிம் முனீர் கத்தார் பிரதமர் ஆகியோரும் வருகைத் தந்தனர்.இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், லெபனானில் ஈரானால் பணம் கொடுத்து இயக்கப்படும் ஹிஸ்புல்லா உடனடியாக வன்முறையை நிறுத்த வேண்டும்.

இல்லையெனில் ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்படும் என்று மிரட்டல் விடுத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானியப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை அரங்கில் இருந்து வெளியேறினர். ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், அமெரிக்கா தனது அறிக்கைகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது என்று தெரிவித்தார்.

தங்களது ஆயுதப் படைகள் பதிலளிக்கத் தயாராக உள்ளன. எனவே, அவர்கள் என்ன சொன்னாலும், அதைச் செயலில் காட்டுபவர்கள் நாங்கள் தான் என்று எச்சரித்துள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *