பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது – குஷ்பூ ஆதங்கம்!

Advertisements

சென்னை தி.நகரில் பாஜக நிர்வாகி குஷ்பூ செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறியது,

தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் பெண்களுக்குப் பாலியல் தொல்லை நடக்கும்போது, கட்சியைத்தான் பெரிது படுத்துகிறீர்கள்.

ஒரு பெண்ணுக்குப் பாலியல் தொல்லை நடக்கும்போது எந்தக் கட்சியினரும் பேசலாம். நாங்கள் இருப்பது பாஜக அலுவலகம். ஆனால் நாங்கள் பாஜக சார்பாகப் பேசக் கிடையாது.

எங்கள் பின்னால் பாஜக இருக்கிறது. அது வேற விஷயம். தயவுசெய்து அரசியல் ஆக்காதீர்கள். நீங்கள் ஆளும் மாநிலங்களில் இது நடக்கலையா என்று கேள்வி கேட்காதீர்கள். பெண்கள் அரசியல் ஃபுட்பால் கிடையாது. இங்கேயும் அங்கேயும் தூக்கி வீசுவதற்கு.

இந்த மாணவிக்கு நடந்த பிரச்சனை இத்துடன் முடிய வேண்டும் என்பது எங்களது நோக்கம். மீண்டும் இது போன்ற பிரச்சை தொடரக் கூடாது.

25 லட்சம் கொடுத்துவிட்டோம், கல்வி கட்டணத்தைக் கொடுத்துவிட்டோம் என்று சொல்வதால் பெண்ணுக்கு ஏற்பட்ட அநியாயம் சரியாகிவிடுமா ?

பாதிக்கப்பட்ட பெண்ணை நான் நிச்சயம் பாராட்டுகிறேன். தைரியமாக வெளியே சொன்னார். நிறைய பெண்கள் வெளியே சொல்ல மாட்டேங்குறார்கள். என்னமாதிரி வேறு பெண்கள் பாதிக்கப்படக் கூடாது என நினைத்த அந்தப் பெண்ணைப் பாராட்ட வேண்டும். அந்தப் பெண்பற்றிய தகவல்களை வெளியே யார் கொடுத்தது? அவர்களை முதலில் தண்டிக்க வேண்டும்.

சட்டரீதியாகத் தவறுதான். ஏன் அதுப்பற்றிப் பேச்சுக்கிடையாது. எந்த மாநிலமாக இருந்தாலும் பெண்களுக்கு எதிராக வன்முறை நடந்தால் கேள்வி கேட்போம். அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமைக்கு நீதி கேட்டுப் பாஜக மகளிரணி நாளைப் பேரணி நடத்துகிறது.

நான் மகளிர் ஆணையத்தில் இருந்திருக்கிறேன். ரொம்ப மோஷமாகப் புகார்கள் வரும்.

மற்ற மாநிலங்களைக் கம்பேர் பண்ணாதீங்க. என் வீட்டில் பிரச்சினை நடக்கும்போது மற்ற வீட்டில் நடக்குதா இல்லையா எனப் பேசக் கூடாது. கண்ணாடி வீட்டிலிருந்து கொண்டு மற்றவர்கள் வீட்டில் கல் வீசக் கூடாது. சௌமியாவை ஏன் கைது செய்தீர்கள். கனிமொழி எங்கே? எல்லாத்துக்கும் முன் வந்து பேசுவாங்களே! திமுக மகளிர் அணி எங்கே? கைதுக்கு நாங்கள் பயப்படவில்லை. திமுக சார்பாக எந்தப் பெண் குரல் கொடுத்தார்கள். அமைச்சர், எம்.பி யாராவது குரல் கொடுத்தார்கள்?

சீமான் பற்றிப் பேசவிரும்பவில்லை. அவரை முதல்வரைப் பார்த்துக் கேள்வி கேட்கச் சொல்லுங்கள்.

மாநில மகளிர் ஆணையம் எங்கே போனது? எங்கேவாவது பேசுனாங்களா? அரசு சொல்வதைதான் அவர்கள் செய்வார்கள். யார் அந்தச் சார்? அதைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *