Dhayanithi Stalin :கூட்டணியில் விரிசல் ஏற்படாதா?எனத் துண்டு போட்டுக் காத்து இருக்கிறார்கள்!

Advertisements

தஞ்சாவூர்:

Advertisements

“பல அணிகளாகச் சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ., வும் தி.மு.க., கூட்டணியில் விரிசல் ஏற்படாதா எனத் துண்டு போட்டுக் காத்து இருக்கிறார்கள்” எனத் துணை முதல்வர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார்.

தஞ்சாவூர் தொகுதி எம்.பி., க்கான புதிய அலுவலகம், கருணாநிதி நுாலகத்தை துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்தார். அவர் தி.மு.க., நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய நான் துணை முதல்வராக வர வேண்டும் என்ற முதல் குரல் தஞ்சை மாவட்டத்திலிருந்து தான் வந்தது. அதுவும் முன்னாள் எம்.பி., பழனிமாணிக்கம் தான் கூறினார். அதன் பிறகு, நான் துணை முதல்வராக நியமிக்கப்பட்டேன். முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கடி “நான் டெல்டாக்காரன்” எனக் கூறி மகிழ்வார். அதேபோல் நானும் டெல்டாகாரன் தான்.

திராவிட மாடல் ஆட்சியின் தொடர் வெற்றிகள் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க.வை அழிக்க வேண்டும் எனப் பல பேர் கிளம்பி வந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. மக்களே பதில் கூறுவார்கள்.பல அணிகளாகச் சிதறி கிடக்கும் அ.தி.மு.க.வும், யாருமே சீண்டாத பா.ஜ., வும் தி.மு.கக் கூட்டணியில் விரிசல் ஏற்படாதா? எனத் துண்டு போட்டுக் காத்து இருக்கிறார்கள். அவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாகப் பதில் கூறினார்.
நமது கூட்டணி கட்சி தலைவர்களும் தி.மு.கக்கூட்டணியில் தான் தொடர்வோம் என உறுதி நிலையில் உள்ளனர். வரும் 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 200க்கும் அதிகமான தொகுதிகளை வெல்ல வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்து 2வது முறையாக முதல்வர் ஸ்டாலின் பதவியேற்பார். 7வது முறையாகத் தி.மு.க., ஆட்சி அமையும் எனத் துணை முதல்வர் கூறியுள்ளார்.

2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுங்கள். அது தீர்மானமாக மட்டுமில்லாமல், அதற்காகக் கடுமையாக உழைத்து வெற்றி பெற பாடுபடுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *