
தனியார் நிறுவனமான ஷெல் நிறுவனத்துடன் தொடர்பில் பல தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதில் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பங்கு உண்டு…
காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக… நாயுடு கைது செய்யப்பட்டது ரெட்டியால் தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் கைது செய்யப்பட்ட விவாகரம் பூதாகாரமாகப் பேசப்படுகிறது.
இதனால் ஆந்திராவில் பரபரப்பான சூழல் நிலவுகிறது. ஆங்காங்கே போராட்டங்களும், கடை அடைப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல். ஏ வும் முன்னாள் அமைச்சருமான கண்ட்டா ஸீனிவாச ராவும் அவரது மகனும்கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தில் வேலையற்ற இளைஞர்களுக்குத் திறனை வளர்க்க 371 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அது சம்பந்தமான ஊழல் தொடர்பான வழக்கானது 2021-ல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நடந்த விசாரணையில் சந்திரபாபு நாயுடு முதல் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டு செப்டபர் 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
காரணம் என்ன பார்க்கலாம்…
2014- ம் ஆண்டில் ஆந்திர மாநிலம் முழுதும் சிமெண்ட் செண்டெர் ஆப் எக்செலென்ஸ் கிளஸ்டர்ஸ் நிறுவனம் என்று அரசாணை ஒன்று வெளியிடப்பட்ட்து.3,300 கோடி இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதில் 90 சதவிகித மானியம் தொழில் நுட்ப பங்குதாரர்களாகச் சிமெண்ட்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் வழங்கியது.

ஆந்திர அரசு வெறும் 10 சதவிகிதம் மட்டுமே வழங்கியது.அந்த ஆண்டே இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.இந்தப் புரிந்துணார்வு ஒப்பந்தத்தில் சிமெண்ட்ஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனங்கள் வழங்கிய 90 சதவிகித மானியம்குறித்து குறிப்பிடப்படவில்லை.இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சந்திரபாபு நாயுடு மற்றும் தெலுங்கு தேச மாநிலதலைவர் கே. அச்சன் நாயுடுவும் ஒப்புதல் அளித்துள்ளனர்.
இது மோசடி என்பது தெளிவாகும் பட்சத்தில் அப்போது அமைச்சராக இருந்த ஸீநிவாஸ் ராவுக்கும் தொடர்பு இருப்பதாக சிஐடி தெரிவித்துள்ளது.முற்றிலும் விதிகளுக்குப் புறம்பாக அமைச்சர்கள் குழுவிற்கு தெரியாமலேயே சட்ட விரோதமாக ஆந்திர திறன் மேம்பாட்டுக குழு அமைக்கப்பட்டு செயல்பட்டுள்ளதாகக் குற்ற்ம் சாட்டப்பட்டுள்ளது.
சிஐடி தலைவர் சஞ்சய் கூறுகையில், இக்குழு 371 கோடியை முழுவதுமாக இத்திட்டத்திற்கு பயன்படுத்தாமல் சிறு பகுதியை மட்டுமே நிறுவனங்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.மேலும் போலி விலைப்பட்டியல் தயாரித்து ஷெல் நிறுவனம் மூலமாகத் திருப்பி விடப்பட்டுள்ளது.
அது மட்டுமல்லாமல் விலைப் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த முகவரி கூடப் பொய்யானது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது.இத்தகைய மோசடியில் சந்திரபாபு நாயுடு முக்கிய சூத்திரதாரி ஆவார். மேலும் மற்ற அமைச்சர்கள் கூட இதில் சம்பந்த்ப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகம் மூலமாகத் தகவல்கள் பெறப்பட்டதில் , தனியார் நிறுவனமான ஷெல் நிறுவனத்துடன் தொடர்பில் பல தனியார் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதில் சந்திரபாபு நாயுடுவுக்கு பெரும் பங்கு உண்டு, அவர் தான் முதன்மைக் குற்றவாளி என்று சஞ்சய் அடித்துக் கூறுகிரார்.

மேலும் டிசைன் டெக் நிறுவனத்துடன் 371 கோடி ஒப்பந்தமானது. ஆனால் சிமென்ஸ் நிறுவனத்துக்கு 58.8 கோடி மட்டுமே கொடுத்துள்ளதாக ஆணித்தரமான ஆதாரங்கள் மூலமாகத் தெரியவந்துள்ளது.
அப்படியானால் சிமென்ஸ் நிறுவனத்தின் எம்டி யான சுமன் போஸ் மற்றும் டிசைன் டெக் நிறுவனர் கான்வில்கர் இருவம் சேர்ந்து 241 கோடியை மோசடி செய்துள்ளார்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
ஹவாலா சேனல்கள் வாயிலாகப் புனே மற்றும் ஹைதராபாத்துக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.ஸ்கில்லர் எண்டர்பிரைசஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முன்னாள் ஆலோசகர் போஸ், கான்வில்கர், முகுல் மற்றூம் பட்டயக் கணக்காளர் சுரேஷ் கோயல் போன்றோரை அமலாக்கத்துறை சென்ற அண்டு கைது செய்தது.இந்த நிலையில் டிசைன் டெக் நிறுவனத்துக்குச் சொந்தமான 31.2 கோடி சொத்துக்களை அமலாக்கத்துறை தற்காலிகமாகப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம் என்பது போல இப்பிரச்னையில் ஜெகன் மோகன் ரெட்டி பெயர் அடிபடுகிறது….
எப்படி.? ஆந்திரா தெலுங்கு தேசம் எனப் பிரிவதற்கு முன்பிருந்தே ரெட்டி சமூகத்திற்கும், நாயுடு சமூகத்த்ற்கும் இடையே பனிப்போர் நிலவி இருந்தது.
தற்போது ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு கைதால் நிலவும் அசாதாரண சூழலில் மறைமுகமாக ரெட்டி மற்றும் நாயுடு சமூகத்தினருக்கும் கடும் மோதல் பின்னணி உள்ளதாகச் சொல்லப்படுகிறது.நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் இது போன்ற கைது, தெலுங்கானா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காரணமாக இருக்கக்கூடும் எனப் பேச்சு அடிபடுகிறது…
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய். எஸ். ராஜேந்திரன் மகன் தான் தற்போதைய தெலுங்கானா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி. தந்தை இறப்புக்குப் பின் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிப் புதிய கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலிலேயே 67 தொகுதிகளைக் கைப்பற்றி முதல்வரானார். இளம் தலைவரான இவர் இந்தியா முழுவதும் பேசப்படும் சிறந்த தலைவராக விளங்குகிறார்.
இவர் புதிய கட்சியைத் தொடங்கி ஆந்திர அரசுக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தினார். அப்போது சந்திரபாபு நாயுடு இவரையும் தொண்டர்களையும் சுட்டுத் தள்ள வேண்டும் எனக் கூறியதைத் தொடர்ந்து இருவருக்கும் வார்த்தைபோர் தொடர்ந்து கொண்டிருந்தது. நாயுடுவின் ஊழல்களை அம்பலப்படுத்திக் கொண்டே இருப்பார்.
காக்காய் உட்கார பனம் பழம் விழுந்த கதையாக… நாயுடு கைது செய்யப்பட்டது ரெட்டியால் தான் என்று அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.


