வார இராசி பலன்கள் – 5.8.2024 முதல் 11.8.2024 வரை-பரிகாரங்கள்!

Advertisements

பலன்கள் – பரிகாரங்கள் 5.8.2024 முதல் 11.8.2024 வரை
நேயர்களே,
இந்த வார இராசி பலனில் உங்கள் இராசிக்கு உரிய பலன்கள்
மற்றும் பரிகாரங்களை பார்க்கலாம்.

1 மேஷ இராசி (அசுவினி, பரணி, கிருத்திகை முதல் பாதம் )
மேஷ இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி செவ்வாய் இந்த வாரம் உங்கள்
இராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 4,5,6,7 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரம்.நீண்ட நாள் வராத
பழைய பாக்கிகள் வசூலாகும்.பணப் பற்றாக்குறை
தீரும்.பொருளாதார வளர்ச்சி உண்டாகும்.கணவன் மனைவி
ஒற்றுமை அதிகரிக்கும்.சிலருக்கு தாய் வழி சொந்தங்களின்
உதவிகள் கிடைக்கும்.மனக் குழப்பங்கள் தீரும். கடன்
தொல்லைகள் விலகும்.புதிய முயற்சிகள் கைகூடும்.வீடு வண்டி
வாகன மாற்றம் ஏற்படும்.குழந்தைகளால் மகிழ்ச்சி
உண்டாகும்.நீண்ட நாள் நினைத்த காரியம் ஒன்று சுபமாக
முடியும். தொழிலில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.திருமணத்
தடை நீங்கும். வெளியூர் பயணம் வெற்றியாகும்

பரிகாரங்கள்

2

இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… பச்சை
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை….  புதன்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
வாசுதேவாய நம :

2 ரிஷப இராசி (கிருத்திகை 2,3,4 ஆம் பாதங்கள், ரோகிணி,
மிருகசீரிஷம் 1,2 பாதங்கள்)
ரிஷப இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி சுக்கிரன் இந்த வாரம் உங்கள்
இராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 3,4,5,6 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்கிறார்.
இது உங்களுக்கு நல்ல வாரம்.எடுக்கும் முயற்சிகள் அனைத்தும்
வெற்றியாகும். குழந்தைகளால் பெருமை அடைய கூடிய
அற்புதமான வாரம். பயணங்கள் அதிகமாக மேற்கொள்வீர்கள்.
சிலருக்கு வீடு வண்டி வாகன மாற்றம் ஏற்படும்.தொழில்
வியாபாரத்தில் நல்ல லாபம் வரும். நண்பர்கள் மூலம் அனுகூலம்
உண்டாகும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு, சம்பள
உயர்வு ஏற்படும் .சுபகாரியங்கள் கை கூடும்.குடும்ப ஒற்றுமை
சந்தோஷத்தை தரும்.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குழந்தை
இல்லாதவர்க்கு குழந்தை பாக்கியம் உண்டாகும்..வார
இறுதியில் காரியத் தடைகள் ஏற்பட்டு விலகும்.

3

பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்…. நீலம்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை….  சனி
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
சிவாய நம :

3 மிதுன இராசி (மிருகசீரிஷம் 3,4 ஆம் பாதங்கள்,
திருவாதிரை, புனர்பூசம் 1,2,3 பாதங்கள் )
மிதுன இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி புதன் இந்த வாரம் உங்கள் இராசிக்கு
2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 2,3,4,5 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்கிறார்.
இது உங்களுக்கு அற்புதமான வாரம்.கடன் பிரச்சனை தீரும்.
சிலருக்கு பதவி உயர்வுடன் வேலை மாற்றமும் உண்டாகும்.
பழைய பாக்கிகள் வசூலாகும்.உழைப்புக்கு ஏற்ற ஊதியம்
கிடைக்கும்.திருமணப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.
வெளியூர் பயணம் வெற்றியாகும் .திடீர் பண வரவு
உண்டாகும்.தொழிலில் நல்ல லாபம் வரும். குழந்தைகளால்
மகிழ்ச்சி உண்டாகும்..கூட்டுத்தொழிலில் நல்ல முன்னேற்றம்

4

உண்டாகும். சிலருக்கு சுப விரயங்கள் ஏற்படலாம் .கணவன்
மனைவி ஒற்றுமை இந்த வாரத்தில் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்
இந்த வாரம்…
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… சிவப்பு
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  ஞாயிறு
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் சர்வம்
கிருஷ்ணார்ப்பணம்

4 கடக இராசி (புனர்பூசம் 4 ஆம் பாதம், பூசம், ஆயில்யம் )
கடக இராசி நேயர்களே
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசி மற்றும் 2,3,4 ஆம்
இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இது உங்களுக்கு நல்ல வாரம்.சிலருக்கு குழந்தை பாக்கியம்
ஏற்படும்.மனம் உற்சாகமாக காணப்படக் கூடிய வாரம்.பூர்வீக
சொத்தில் இருந்து வரவேண்டிய பணம் கைக்கு வரும்.வீடு
கட்டும் யோகம் உண்டாகும்.கணவன் மனைவிக்குள் இருந்து
வந்த பிரச்சனைகள் நீங்கும்.மனம் சந்தோஷமாக இருக்கும்.
நினைத்த காரியங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்க கூடிய நல்ல
வாரம் .வாழ்க்கை துணையால் மகிழ்ச்சி
உண்டாகும்.பொருளாதாரம் திருப்திகரமாக இருக்கும்.எதிலும்
வெற்றி உண்டாகும்.
பரிகாரங்கள்

5

இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… மஞ்சள்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  திங்கள்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
பிரம்ம தேவாய நம:

5 சிம்ம இராசி (மகம். பூரம், உத்திரம் முதல் பாதம் )
சிம்ம இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி சூரியன் இந்த வாரம் உங்கள்
இராசிக்கு 12 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 12 ஆம் இடம்,
இராசி, மற்றும் 2,3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இது உங்களுக்கு வாய்ப்புகள் நிறைந்த வாரம். வாரத்
தொடக்கத்தில் ஒரு சில செலவுகள் ஏற்பட்ட போதும், வார
முடிவில் எதிர்பாராத தன வரவு , மன மகிழ்ச்சியை தரும். உடல்
ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும்.மனக் குழப்பங்கள்
தீரும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்புகள் ஏற்படும்.செய்
தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.சகல பாக்கியங்களும்
உண்டாகும். கூட்டுத் தொழிலில் நல்ல லாபங்கள் வரக்கூடிய
நல்ல வாரம் .சம்பள உயர்வு பதவி உயர்வு சிலருக்கு
கிடைக்கும்.குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம்
உண்டாகும். ஏதோ ஒரு விதத்தில் தேவையான உதவிகள், தக்க
சமயத்தில் கிடைக்கும்..

6

பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… ஆரஞ்ச்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  புதன்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
சிவயவசி

6 கன்னி இராசி (உத்திரம் 2,3,4 ஆம் பாதங்கள், அஸ்தம்,
சித்திரை 1,2 பாதங்கள் )
கன்னி இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி புதன் இந்த வாரம் உங்கள் இராசிக்கு
11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 11, 12 ஆம் இடம்,
இராசி மற்றும் 2 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரம்.புதிய முயற்சிகள்
வெற்றியைத் தரும்.சிலருக்கு குழந்தை பாக்கியம்
உண்டாகும்.நண்பர்கள், உறவினர்களால் ஆதாயம்
உண்டாகும்.தந்தை வழி சொத்து கைக்கு வரும்.உத்தியோகத்தில்
சம்பள உயர்வு, பதவி உயர்வு, இடமாற்றம் சிலருக்கு
ஏற்படும்.திருமணப் பேச்சு வார்த்தை சுபமாக முடியும்.நினைத்த
காரியங்கள் அனைத்தும் கைகூடும்.சகல பாக்கியங்களும்
உண்டாகும்.தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.பிரிந்த

7

கணவன் மனைவி மீண்டும் ஒன்று சேர்வார்கள். குலதெய்வ
வழிபாடு அனுகூலத்தை தரும் .முன்னோர்களின் ஆசீர்வாதம்
பரிபூரணமாக கிடைக்கும்.
பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… பச்சை
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  வெள்ளி
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் தும்
துர்காய நம :

7 துலா இராசி (சித்திரை 3, 4 பாதங்கள் சுவாதி விசாகம் 1,2,3
பாதங்கள் )
துலா இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி சுக்கிரன் இந்த வாரம் உங்கள்
இராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 10, 11, 12 மற்றும்
இராசியில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் நல்ல வாரம். வார தொடக்கத்தில் அற்புதமான
பலன்கள் உண்டாகும். வேலை செய்யும் அலுவலகத்தில் உங்கள்
மரியாதை கூடும்.தந்தை வழி சொந்தங்கள் மூலம் ஆதாயம்
உண்டாகும்.உத்தியோகத்தில் சம்பள உயர்வு பதவி உயர்வுடன்
இடமாற்றமும் சிலருக்கு ஏற்படும்.திருமணப் பேச்சுவார்த்தை
சுபமாக முடியும்.நினைத்த காரியங்கள் அனைத்தும்

8

கைகூடும்.சகல பாக்கியங்களும் உண்டாகும்.தொழிலில் நல்ல
வளர்ச்சி உண்டாகும்.கணவன் மனைவி ஒற்றுமை
அதிகரிக்கும்.வார மத்தியில் சுப விரயங்கள் உண்டாகலாம்.

பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… சிவப்பு
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  வியாழன்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் நமசிவாய

8 விருச்சிக இராசி ( விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம், கேட்டை
)
விருச்சிக இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி செவ்வாய் இந்த வாரம் உங்கள்
இராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 9, 10, 11, 12 ஆம்
இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
வார தொடக்கத்தில் மனம் உற்சாகமாக இருக்கும்.வார முடிவில்
சுப விரயங்கள் உண்டாகலாம்.நல்லவர்கள் உதவி தக்க
சமயத்தில் கிடைக்கும்.கடன் பிரச்சனை தீரும். வேலை
இல்லாதவர்க்கு நல்ல வேலை கிடைக்கும்.தொழிலில் நல்ல
முன்னேற்றம் உண்டாகும்..உழைப்புக்கேற்ற ஊதியம்

9

கிடைக்கும்.திருமணம் சம்பந்தமான பேச்சு வார்த்தை இனிதே
முடியும்.தந்தை வழி உறவுகள் மூலம் அனுகூலம்
உண்டாகும்.சகல பாக்கியங்களும் உண்டாகும்.திடீர் அதிர்ஷ்டம்
சிலருக்கு உண்டாகும்.கூட்டுத் தொழிலில் நல்ல லாபங்கள்
வரக்கூடிய வாரம்.சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு
கிடைக்கும்.சித்தர்கள் வழிபாடு வாழ்வில் உற்சாகத்தை தரும்.
பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்…. மஞ்சள்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  ஞாயிறு
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
நமோ நாராயணாய

9 தனுசு இராசி ( மூலம் , பூராடம், உத்திராடம் முதல் பாதம் )
தனுசு இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி குரு இந்த வாரம் உங்கள் இராசிக்கு
6 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 8, 9, 10, 11 ஆம்
இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வார தொடக்கத்தில் உங்களுக்கு சந்திராஷ்டமம்
இருப்பதால் கவனம் தேவை. முக்கியமாக கூட்டு தொழிலில்
புதிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். சிலருக்கு கடன்
பிரச்சனை உண்டாகலாம்.உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம்

10

தேவை.வார இறுதியில் அதிக அளவு நன்மைகள்
உண்டாகும்.தந்தை உறவு வழியில் அனுகூலம் உண்டாகும்.
தொழில் வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.திருமணம்
சம்பந்தமான பேச்சு வார்த்தை இனிதே முடியும். புதிய
முயற்சிகள் கைகூடும்.நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள்
கிடைக்கும்.வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் எல்லாம் சரி
ஆகும்.

பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்… பச்சை
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  புதன்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம்
ஓம் சிவ சிவ ஓம்

10 மகர இராசி (உத்திராடம் 2,3,4 பாதம் திருவோணம்,
அவிட்டம் 1,2 பாதங்கள்)
மகர இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி சனி இந்த வாரம் உங்கள் இராசிக்கு 2
ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 7, 8, 9, 10 ஆம்
இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.

11

வார தொடக்கத்தில் சுப காரியங்கள் நல்ல விதமாக
நடைபெறும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை
கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம்
உண்டாகும் திருமணப் பேச்சு வார்த்தை இனிதே முடிவாகும்.
பண வரவு உண்டாகும். வார மத்தியில் சந்திராஷ்டமம்
வருவதால் வேலையில் அலைச்சல் உண்டாகலாம். உடல்
ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு ஏற்பட்டு விலகும்..வார
முடிவில் அற்புதமான பலன்கள் உண்டாகும்.கடன் பிரச்சனை
தீரும்.அரசாங்க அனுகூலம் ஏற்படும்.நினைத்த காரியங்கள்
எல்லாம் நல்லபடியாக நடக்க கூடிய நல்ல வாரம் .எதிலும்
வெற்றி உண்டாகும்.

பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்…. நீலம்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  வெள்ளி
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
சரவணபவ

11 கும்ப இராசி (அவிட்டம் 3,4 பாதங்கள் , சதயம், பூரட்டாதி
1,2,3 பாதங்கள் )
கும்ப இராசி நேயர்களே

12

உங்கள் இராசி அதிபதி சனி இந்த வாரம் உங்கள் இராசியில்
சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 6, 7, 8, 9 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் உங்களுக்கு அற்புதமான வாரம்.சுபகாரியங்கள் கை
கூடும்.சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு உண்டாகும்.தொழில்
வியாபாரத்தில் நல்ல லாபம் வரும்.கூட்டுத் தொழிலில் நல்ல
முன்னேற்றம் உண்டாகும்.கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும்.
குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.அலுவலகத்தில் பதவி
உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும்.. வார மத்தியில்
சந்திராஷ்டமம் வருவதால் சந்திராஷ்டம நாட்களில் காரியத்
தடைகள் ஏற்பட்டு விலகும். வார முடிவில் எதிர்பார்த்த பண
உதவி கிடைக்கும்.சிலருக்கு குழந்தை பாக்கியம்
உண்டாகும்.மனம் சந்தோஷமாக இருக்கும்.மொத்தத்தில் இந்த
வாரம் உங்களுக்கு நல்ல வாரம்.
பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்…. மஞ்சள்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை…  வியாழன்
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம் கம்
கணபதயே நம :

12 மீன இராசி (பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

13

மீன இராசி நேயர்களே
உங்கள் இராசி அதிபதி குரு இந்த வாரம் உங்கள் இராசிக்கு
3 ஆம் இடத்தில் சஞ்சாரம் செய்கிறார்.
இந்த வாரம் சந்திரன் உங்கள் இராசிக்கு 5,6,7,8 ஆம் இடத்தில்
சஞ்சாரம் செய்கிறார்.

இது உங்களுக்கு நல்ல வாரம்.நினைத்த காரியங்கள் அனைத்தும்
நல்ல படியாக நடக்கும்.புத்துணர்ச்சியுடன்
இருப்பீர்கள்.எதிர்பார்த்த வேலை மாற்றம் சிலருக்கு
அமையும்.திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி
உண்டு. வார இறுதியில் தொழிலில் மாற்றம் செய்வீர்கள்.
சிலருக்கு பணி இடமாற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு
வரும். புது வீடு கட்டும் யோகம் உண்டாகும். உடல்
ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வார இறுதியில்
சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முடிவுகளை வார முடிவில்
எடுப்பதை தவிர்க்கவும். வெளியூர் பயணத்தை தள்ளி போடுவது
நல்லது.
பரிகாரங்கள்
இந்த வாரம்…..
உங்களுக்கு அதிர்ஷ்டமான நிறம்…. ரோஸ்
உங்களுக்கு அதிர்ஷ்டமான கிழமை….  வெள்ளி
நினைத்த காரியம் நடக்க சொல்ல வேண்டிய மந்திரம் ஓம்
அகத்தீசாய நம :

14

நேயர்களே மீண்டும் அடுத்த வாரம் இந்த வார இராசி
பலன்கள்- பரிகாரங்கள் நிகழ்ச்சியில் சந்திப்போம்
வரும் வாரம் இனிதே அமைய வாழ்த்துகள்….

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *