Advertisements

ஆடி மாதம் அம்மன் வழிபாட்டுக்கு உகந்த மாதம் .பார்வதியின் தவத்தில் மகிழ்ந்த பரமசிவன் ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார் .இதனால் இம்மாதத்தில் சிவனுடைய சக்தியை விட அம்மனுடைய சக்தி அதிகமாக இருக்கும்.
ஆடி மாத வழிபாடுகளில் வேப்பிலை, மஞ்சள் தூள் பிரசாதம் போன்றவை முக்கியமானவை .கூழ் வார்ப்பதற்கு மிகவும் விசேஷமான மாதமாக ஆடி மாதம் கருதப்படுகிறது.
ஆடி மாத அம்மன் பிரசாதங்களில் மிக முக்கியமானது கூழ். இந்த கூழ் உடலையும் உள்ளத்தையும் குளிர்ச்சிப்படுத்தும் சிறந்த உணவாகும்.ஆடி மாதத்தில் வீசும் காற்றின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் இருமல் _அம்மை போன்ற வியாதிகள் வருவதற்கு வாய்ப்பு இருக்கும். காற்றை காளியம்மன் கட்டுப்படுத்துவதாக ஐதீகம் .இதனால் அம்மன் கோவிலில் பக்தர்கள் கூழ் ஊற்றி வழிபாடு செய்வதாக வேண்டிக் கொண்டு கூழ் வார்த்துவிட்டு அதை மற்றவர்களுக்கு பிரசாதமாக வழங்குவார்கள்.
கூழ்வார்த்தல் தொடர்பாக புராணங்களில்ஒரு கதை சொல்லப்படுகிறது.
தவத்தில் சிறந்து விளங்கி ஜெமத்க்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்தவீரியார்ச்சுனன் மகன்கள் கொன்றுவிடுகின்றனர் .இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்காமல் முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்கிறாள் .தீயை மூட்டி அதில் இறங்குகிறாள் .அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களில் ரேணுகா தேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்று உடலை மறைக்க அருகில் இருந்த வேப்பிலையைப் பறித்து ஆடையாக அணிந்து கொண்டாள். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். பொதுமக்கள் அவருக்கு பச்சரிசி,வெல்லம், இளநீரை ,உணவாக கொடுத்தனர் .இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உண்டார். அப்போது சிவபெருமான் தோன்றி ரேணுகா தேவியி டம்,உலக மக்களால்துன்பப்படும் அம்மை நோயை நீக்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரம் ஆகும். என்று வரம் அளித்தார் இச்சம்பவத்தை நினைவு கூரும் விதத்தில் ஆடி மாதத்தில் அம்மன் கோவிலில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.
செந்தூர் நாராயணன்.
Advertisements


