Rowdy Komban Encounter: பிரபல ரவுடிசுட்டுக்கொலை!

Rowdy Komban Encounter: திருச்சியில் 11 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி காவல்துறையால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி – பெரம்பலூர் சாலையில் உள்ள சிறுகனுர் சனமங்கலம் வனபகுதியில் ரவுடிகொம்பன்  ஜெகன் பதுங்கி இருந்தபோது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். திருச்சி தனிப்படை போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில்  ரவுடி கொம்பன் ஜெகன் சுட்டு கொலை.

காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து போலீஸார்  சுட்டு கொன்றதாகக் கூறப்படுகிறது. மேலும் திருச்சியில் பிரபல ரவுடியாக வலம்வந்த  இவர்மீது கொலை, வழிப்பறி உள்ளிட்ட  11 வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.

இன்னும் சற்று நேரத்தில் ரவுடி ஜெகனின் உடல் திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட உள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *