Web Series Gangs: வெப்தொடர் பூஜையுடன் துவக்கம்!

Advertisements

சவுந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் புதிய வெப் தொடரின் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்ட் அடித்துத் தொடங்கி வைத்தார்.

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த். இவர் கோச்சடையான்’, தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ போன்ற படங்களை இயக்கிப் பிரபலமானார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவிற்கு திரும்பியுள்ள சவுந்தர்யா, அமேசான் பிரைம் ஓடிடி தளத்துடன் இணைந்து ‘கேங்க்ஸ்’ என்ற புதிய வெப் தொடர் ஒன்றை தயாரிக்கிறார்.

நோவா ஆபிரகாம் இயக்கும் இந்த வெப்தொடரில் நடிகர் அசோக் செல்வன் கதாநாயகனாக நடிக்கிறார். ‘கேங்க்ஸ்’ வெப்தொடரின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இதன் படப்பிடிப்பை நடிகர் ரஜினிகாந்த் கிளாப் போர்ட் அடித்துத் தொடங்கி வைத்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தைச் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *