மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!

Advertisements

சேலம்:

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து கடந்த ஆண்டில் மேட்டூர் அணை 3 முறை நிரம்பியது. இந்த நிலையில் டெல்டா பாசனத்துக்கு தேவைக்கு ஏற்பத் தண்ணீர் அதிகரித்தும், குறைத்தும் திறந்து விடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது. பின்னர் தண்ணீர் திறப்பு படிபடியாகக் குறைக்கப்பட்டு வந்தது. இன்று காலை டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாகக் குறைக்கப்பட்டது.

இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 115.03 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 745 கனஅடிதண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 674 கனஅடியாகக் குறைந்தது.

அணையிலிருந்து டெல்டாவுக்கு 5 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 300 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 85.76 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *