மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Advertisements

மேட்டூர்:

கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி ஆகிய அணைகளுக்குத் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இந்த அணைகளிலிருந்து காவிரி ஆற்றில் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்குக் கடந்த சில தினங்களாக நீர்வரத்து அதிகரித்தப்படி உள்ளது.

நேற்று முன்தினம் வினாடிக்கு 7,414 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலையில் 9,246 கன அடியாக அதிகரித்தது. தொடர்ந்து நேற்று இரவு 29,021 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்தது.

மேலும் இன்று காலையில் நீர்வரத்து அதிகரித்து வினாடிக்கு 32,240 கன அடி தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து காவிரி ஆற்றில் வினாடிக்கு 1000 கன அடியும், கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 300 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. நேற்று 111.39 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு நீர்மட்டம் 113.39 அடி உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 83.05 டி.எம்.சி.யாக உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *