
புதுச்சேரி மாநிலத்தில் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடையாக இருக்கும் அரசு அதிகாரிகள் விரைவில் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள் என்று காரைக்காலில் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மத்திய அரசின் “நமது இலட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம்” எனும் விழிப்புணர்வு வாகன யாத்திரை இன்று காரைக்கால் அடுத்த நல்லம்பல் பகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் தலைமை ஏற்று விழாவினை துவக்கி வைத்தார். மேலும் பொதுமக்களுக்குச் சபாநாயகர் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இதனை அடுத்து சபாநாயகர் செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில்:-
புதுச்சேரி மாநிலத்தில் அரசு திட்டங்களைச் செயல்படுத்துவதில் தடையாக இருக்கும் அரசு அதிகாரிகளை விரைவில் பணியிட மாற்றம் செய்யப்பட்டு புதிய அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் புதுச்சேரி மாநிலத்தில் அரசு அறிவித்த அனைத்து திட்டங்களையும் அமல்படுத்தப்பட்ட வருகிறது என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அளித்த தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் வெற்றி பெற்ற பின்னர் ஓவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது அதனால் குறை சொல்ல ஒன்றும் இல்லை என்பதால் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தேவையில்லாத குற்றச்சாட்டை வைத்து வருவதாகவும் புதுச்சேரி மாநில சபாநாயகர் செல்வம் காரைக்காலில் இன்று தெரிவித்தார்.
மேலும் இலங்கை அரசால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள காரைக்கால் மீனவர்களின் படகுகளை மீட்க மத்திய மாநில அரசுகள்மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் புதுச்சேரி மாநில சபாநாயகர்செல்வம்தெரிவித்தார்.

