Tripti Dimri:இனி நிர்வாண காட்சிக்கு நோ:பிரபல நடிகை கலக்கம்!

மும்பை : ஜூன் 25: இனிமேல் நிர்வாண காட்சியில் நடிக்கமாட்டேன் என்றார் திரிப்தி டிம்ரி.

‘அனிமல்’ இந்தி படத்தில் ரன்பீர் கபூருடன் நிர்வாண காட்சியில் நடித்திருந்தார் திரிப்தி டிம்ரி. இதில் அப்படி நடித்ததால் சில படங்களில் தனக்கு அதுபோலவே நடிக்க வாய்ப்பு வருவதாகவும் இதற்கு அவரது குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கலக்கத்துடன் கூறியிருக்கிறார். ‘அனிமல் படத்துக்கு முன் சில படங்களில் நடித்திருந்தாலும் இதில்தான் நான் கவனிக்கப்பட்டேன். கதைக்குத் தேவையாக இருந்ததால் அதுபோல் நிர்வாண காட்சியில் நடித்தேன். ஆனால் அதுவே எனது பெற்றோருக்குப் பிடிக்கவில்லை.

ஒரு சில படங்களில் இதேபோல் படு கிளாமராக நடிக்கக் கேட்டார்கள். நான் மறுத்துவிட்டேன். இனி அதுபோல் நடிக்கமாட்டேன். அந்தக் காட்சியால் எனது இமேஜை இழந்துவிட்டதாக உணர்கிறேன்’ என்றார். முன்னதாகப் பட ஹீரோயின் ராஷ்மிகாவை விடத் திரிப்திக்கே இந்தப் படத்தால் அதிக பெயர் கிடைத்தது எனத் தகவல்கள் வெளியாகின. ராஷ்மிகாவின் புகழை அவர் தடுப்பதாகவும் புகார்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *