சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொளத்தூர் தொகுதி தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபுவை முதலமைச்சர் விஜய் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
நுரையீரல் தொற்று காரணமாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள வி.எஸ்.பாபு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 9 நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று மருத்துவமனைக்கு சென்ற முதலமைச்சர் விஜய், வி.எஸ்.பாபுவை நேரில் சந்தித்து அவரது உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை மற்றும் தற்போதைய உடல்நிலை குறித்து மருத்துவர்களிடமும் கேட்டறிந்தார். தொடர்ந்து வி.எஸ்.பாபுவை சந்தித்து நலம் விசாரித்த முதலமைச்சர் விஜய், பின்னர் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.


