கொளத்தூர் MLA வி.எஸ். பாபு மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ். பாபு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதன்கிழமை அன்று திடீரென ஏற்பட்ட கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவர் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, உடனடியாக குடும்பத்தினரும் கட்சியினரும் அவரை சென்னை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான எம்ஜிஎம் (MGM Healthcare) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதித்து தொடர் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வி.எஸ். பாபு, திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் அறிந்த அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தவெக தொண்டர்கள் பலரும் அவர் விரைவில் நலம் பெறவேண்டி கவலை தெரிவித்து வருகின்றனர். மருத்துவமனையில் அவருக்குத் தேவையான சிறப்புச் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *