தெலங்கானாவில் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா மாநில சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருவதையொட்டி மாநிலம் முழுவதும் உள்ள வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கே தொடங்கியது. மாலை 6 மணிவரை வாக்குப் பதிவி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானாவில் மொத்தம் 119 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 3.26 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். மொத்தமுள்ள 35,655 வாக்குச்சாவடிகளில் 27,000 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகள் என அடையாளம் காணப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு நடப்பதன் காரணமாக மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு பணிகளுக்காக 50,000 காவல்துறையினர், 375 துணை ராணுவப்படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச்சாவடி மையங்கள் அனைத்தும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு வாக்குப்பதிவு இயந்திரங்களும், விவிபேட் இயந்திரங்களும் பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டுள்ளனர். பதற்றமான வாக்குச் சாவடிகள் தனிப்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன. மேலும் வாக்குப்பதிவு நடைபெறுவதை கேமராக்கள் மூலம் கண்காணிக்க தேவையான ஏற்பாடுகளைத் தேர்தல் ஆணையம் செய்துள்ளது. இந்தத் தேர்தலில் 2,290 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர்.
முன்னணியில் பிஆர்எஸ், காங்கிரஸ் இருவருக்கும் பலத்த நேர்முனை போட்டி நிலவுகிறது. பாஜக இரண்டாம் இடத்தில் உள்ளது.
இதற்கிடையே முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் மகன் ராமாராவ், சிர்சில்லா தொகுதியில் களமிறங்கி உள்ளார். இதேபோல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி போட்டியிடுகிறார். வாக்குகள் எண்ணிக்கையானது டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது.


