ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் திமுகவுக்கு வாக்களியுங்கள் – கருணாஸ்!

Advertisements

ஈரோடு கிழக்கு தொகுதியில் உதயசூரியனுக்கு வாக்களியுங்கள் என்று முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுக வேட்பாளர் சந்திரகுமாருக்கு வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் எனவும் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்ட மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் அனைவருக்கும் வணக்கம்.

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு (பிப்ரவரிஆம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது.

தி.மு.கச்சார்பில் சந்திரகுமார் அவர்கள் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர்.

திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்குத் தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்துச் சென்றுள்ளோம்.

ஆகவே 5ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குரிய வாக்குப் பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வலிக்கும் திழக வேட்பாளர் சந்திரகுமார்.

அவர்களுக்கு உதய குரியன் சின்னத்தில் வாக்களித்துப் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து மக்கள் முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த

மறவாது வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *