Vijayakanth: ஆத்மா சாந்தியடைய மோட்ச தீபம் ஏற்றி வழிபட்ட தொண்டர்கள்!

Advertisements

ரிஷிவந்தியத்தில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் ஆத்மா சாந்தியடைய வேண்டி மோட்ச தீபம் ஏற்றி தேமுதிகவினர் மனம் உருகி வழிபாடு செய்தனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும் உலகெங்கும் வாழும் தமிழ் மக்களால் கேப்டன் என்று செல்லமாக அழைக்கக்கூடிய புரட்சிக் கலைஞர் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் அவர்கள் உடல்நிலை சரியில்லாமல் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி அன்று உயிரிழந்தார், அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது,அன்று முதல் இன்று வரை தேமுதிக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் நாள்தோறும் அவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி மிக வேதனையுடன் நினைவஞ்சலி செலுத்தி வருகின்றனர்,

இந்த நிலையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் இறந்து இன்றுடன் 30 நாள் ஆகுவதால் அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டி தமிழகம் எங்கும் உள்ள சிவன் கோவில்களில் மோட்ச தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று தேமுதிக தலைமை அறிவுறுத்தி இருந்த நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 2000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த ஸ்ரீ முத்தாம்பிகை சமேத ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் தேமுதிக சார்பில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவரும்,

முன்னாள் ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினரும், தமிழகத்தின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் 30-ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய ஆத்மா சாந்தி அடைய வேண்டி மாவட்ட துணை செயலாளர் டி.கே.கோவிந்தன் தலைமையில், ரிஷிவந்தியம் தெற்கு ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.முருகன்,ஒன்றிய பொருளாளர் மணிகண்டன்,ஒன்றிய துணை செயலாளர் ஆசைக்கண்ணு ஆகியோர்கள் முன்னிலையில் மாவட்ட ஒன்றிய, ஊராட்சி, கிளை நிர்வாகிகள் மோட்ச தீபம் ஏற்றி மனம் உருகி கண்ணீருடன் பிரார்த்தனை செய்து வழிபட்டனர்,

இந்த நிகழ்வானது தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்தின் மீது அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்களும் நிர்வாகிகளும் எந்த அளவுக்கு மதிப்பும் மரியாதையும் அதாவது அவருடைய நினைவிடம் எங்களுக்கு கோவிலாகவும் தலைவர் அவர்கள் எங்களுக்கெல்லாம் தெய்வமாக இருந்து வழி நடத்துவார் என்று எந்த அளவுக்கு நம்பிக்கை வைத்துள்ளார்கள் வேறு எந்த தலைவருக்கும் இது போல தொண்டர்கள் அமைந்ததும் கிடையாது இனி அமையப்போவதும் கிடையாது என்று பொதுமக்களிடையே மிகுந்த நெகிச்சிழியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *