
நடிகர் விஷாலை ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளும் நடிகை சாய் தன்ஷிகா யார் என்பது பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.12 வயது வித்தியாசத்தில் நடக்கும் இந்த திருமணம் குறித்து சமூகவலைதளங்களில் விவாதங்கள் நடைபெறுகின்றன.
பேராண்மை எனும் படத்தில் 2009 ஆம் ஆண்டு சாய் தன்ஷிகா நடிக்க வந்தார். அவர் மாஞ்சா வேலு என்ற படத்தில் 2010 இல் நடித்திருந்தார். அதே ஆண்டில் வெளிவந்த நில் கவனி செல்லாதே என்ற படத்திலும் அவர் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தார்.
எனினும் அரவாண், பரதேசி ஆகிய படங்கள் மூலம் சாய் தன்ஷிகா பிரபலமடைந்தார். மேலும் கபாலி படத்தில் ரஜினிகாந்தின் மகளாக நடித்து சண்டை காட்சிகளில் அசத்தியிருப்பார். கபாலியில் அவரது ஹேர்ஸ்டைல் அதிகமாக பேசப்பட்டது. தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தன்ஷிகா தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.
சாய் தன்ஷிகா, வருகின்ற ஆகஸ்ட் 29ஆம் தேதி விஷாலை திருமணம் செய்யவிருப்பதாக யோகிடா இசை வெளியீட்டு விழாவில் அறிவித்திருந்தார். இவர் பிலிம்பேர் அவார்ட் சவுத் என்ற இரு விருதுகளை பெற்றுள்ளார். லாபம் என்ற படத்தில் நெகட்டிவ் ரோல் செய்தார்.
இந்த நிலையில் நேற்று காலை முதலே யார்ரா அந்த பொண்ணு என்ற கேள்வி எழுந்தது. அப்போது அரசல் புரசலாக அது சாய் தன்ஷிகா என சொல்லப்பட்டது. ஆனால் மாலை நடந்த யோகிடா படத்தில் அதை தன்ஷிகாவே உறுதிப்படுத்தினார். வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்து கொள்வதாக அறிவித்தார்.



