Vishal: மும்பை சிபிஐ அலுவலகத்தில் ஆஜர்!

Advertisements

மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

தமிழ் சினிமாவின் கமர்ஷியல் இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் ஹரி. அவர் இயக்கிய சாமி, ஆறு, சிங்கம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றவை. சமீபத்தில் அவர் அருண் விஜய் நடிப்பில் உருவான யானை திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்தப் படம் பெரியளவில் வெற்றி பெறவில்லை. இதற்கு அடுத்து ஹரி தற்போது விஷால் நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களுக்குப் பிறகு இருவரும் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இணைகின்றனர். கார்த்திக் சுப்பராஜ் தயாரிக்கும் இந்தப் படத்தைக் குறுகிய காலத்தில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளது படக்குழு. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் ஷூட்டிங் அடுத்தடுத்து நடந்து வந்தது. படத்தில் கதாநாயகியாகப் பிரியா பவானி சங்கர் நடிக்க, யோகி பாபு நகைச்சுவை வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில்,  மார்க் ஆண்டனி திரைப்படத்தை இந்தியில் வெளியிடத் தணிக்கை சான்று பெறுவதற்கு மத்திய தணிக்கை வாரிய அதிகாரிகள் தன்னிடம் லஞ்சம் வாங்கியாக நடிகர் விஷால் அளித்த புகாரைத் தொடர்ந்து 3 அதிகாரிகள்மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐ அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் மும்பை சிபிஐ அலுவலகத்தில் நடிகர் விஷால் மற்றும் அவரது மேலாளர் ஹரிகிருஷ்ணன் விசாரணைக்காக ஆஜராகி உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *