Advertisements

மாநிலங்களவையிலும், மக்களவையிலும் நிறைவேற்றப்பட்ட ‘வந்தே மாதரம்’ தேசியப் பாடலுக்குச் சட்ட பாதுகாப்பு அளிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
வந்தே மாதரம் தேசியப் பாடலுக்குத் தேசிய கீதத்திற்கு இணையான சட்டப் பாதுகாப்பு வழங்குவதற்காக, தேசியக் கௌரவச் சின்னங்கள் அவமதிப்புத் தடுப்புத் திருத்த மசோதா மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. இம்மசோதா கடந்த மாதம் 29ஆம் தேதி மாநிலங்களவையிலும், 30ஆம் தேதி மக்களவையிலும் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘வந்தே மாதரம்’ மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். அதன் மூலம், அம்மசோதா, சட்ட வடிவம் பெற்றுள்ளது. இதன்படி, வந்தே மாதரம் பாடுவதை உள்நோக்கத்துடன் தடுத்தாலோ, அப்பாடலைக் கூட்டத்தில் பாடும்போது இடையூறு விளைவித்தாலோ 3 ஆண்டுகள்வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இம்மாதம் 15ஆம் தேதி, தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடி ஏற்றும்போது முதல்முறையாக ‘வந்தே மாதரம்’ பாடல் பாடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Advertisements



