Villianur: ரூ. 16 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய கழிப்பறை திறப்பு!

Advertisements

புதுச்சேரி, வில்லியனூர் பெரியபேட்  அரசு தொடக்கப் பள்ளியில் ரூ. 16 லட்சம்  செலவில் கட்டப்பட்ட புதிய கழிப்பறையை சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் இரா. சிவா திறந்து வைத்தார்.

வில்லியனூர் சட்டமன்றத் தொகுதிகுட்பட்ட பெரியபேட் பகுதியில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக ரூ. 16 லட்சம் செலவில் புதிதாகக் கழிப்பறை கட்டப்பட்டது. புதிதாகக் கட்டப்பட்ட கழிப்பறையை பள்ளிகல்வித்துறை துணை ஆய்வாளர் வட்டம் – 4 அமல்ராஜ் லீமாஸ் அவர்கள் முன்னிலையில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான இரா. சிவா இன்று திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ரேணுகா, ஆசிரியர்கள் மணிமாறன், வெங்கடேசன், கிரிஜா, லட்சுமி காந்தா, குணவதி மற்றும்  ஊர் முக்கியஸ்தர்கள் அங்காளன், பழனிசாமி, செல்வநாதன், ஹரிகிருஷ்ணன், தஷ்ணாமூர்த்தி, வெங்கடேசன், அஞ்சாபுலி, தயாளன், அன்புநிதி, விஜிகுமார், ஜெயபால், சிவா, ராஜா,  திமுக நிர்வாகிகள் தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வநாதன், தர்மராஜ், அவைத்தலைவர் ஜலால் ஹனிப், வர்த்தக அணி அமைப்பாளர் ரமணன், அயலக அணி துனை அமைப்பாளர் தாஹா, விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ராமதாஸ், கோபி, ஆதி திராவிட அணி துணை தலைவர் கதிரவன், கலை இலக்கிய அணி துணை அமைப்பாளர் காளிமுல்லா, ஹாலித், வேதாச்சலம், தங்கராசு, தனசேகர், சேகர், பாலு, ஆனந்தராஜ், பரதன், கிருஷ்ணராஜ், சிலம்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *