விஜயின் ‘சச்சின்’ திரைப்படம் ரீரிலீஸ்!

Advertisements

கடந்த 2005 ஆம் ஆண்டு ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய் மற்றும் ஜெனிலியா நடிப்பில் நடித்து வெளியான சச்சின் திரைப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இன்றும் இப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றும் சமூக வலைத்தளத்தில் வலம் வந்துக் கொண்டுதான் உள்ளது. விஜய் மற்றும் ஜெனிலியா இருவருக்கும் இடையே மிக அழகான கெமிஸ்டிரி இப்படத்தில் இருக்கும்.

இதனால் இந்த ஜோடி ரசிகர்கள் மத்தியில் பெருமளவு ரசிக்கப்பட்டனர்.

இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டானது.

இந்நிலையில் இந்தாண்டு ஏப்ரல் மாதம் சச்சின் திரைப்படம் வெளியாகி 20 வருடங்கள் நிறைவடையும் நிலையில் கோடையில் இப்படத்தை மீண்டும் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாகத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு தனது எக்ஸ் பக்கத்தில் போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *