India Womens Cricket : முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.!

ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. வதோதராவில் இந்தியா – ஜிம்பாப்வே மகளிர் அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து 49 ஓவர்களில் 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக பிலவ்ட் பிசா 62 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து, 198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 27 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய பிரதிகா ராவல் 100 ரன்களும், ஷபாலி வர்மா 64 ரன்களும் எடுத்து அசத்தினர். இதன்மூலம் ஒருநாள் தொடரில் இந்திய மகளிர் அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *