அருள்நிதி-அமீர் கூட்டணி, நடித்துள்ள ‘வேட்ட சாமி’ படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் அருள்நிதியும், இயக்குநரும், நடிகருமான அமீரும் இணைந்து ‘வேட்ட சாமி’ என்ற புதிய படத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில் ஆடுகளம் நரேன், மதுசூதனன் ராவ், ஹரீஷ் பெரேடி, விஜி சந்திரசேகர், இந்துமதி மணிகண்டன், மைனா நந்தினி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குநர் செல்வகுமார் இப்படத்தை இயக்கியுள்ளார். சாமுவேல் மேத்யூ தயாரிப்பில் வெளியாகும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஆன்மிகத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இப்படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த எதிர்பாராத அருள்நிதி-அமீர் கூட்டணி, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தததோடு, ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



