காய்ந்த இலையில் சரோஜாதேவி படத்தை வரைந்து அஞ்சலி..!

Advertisements

உலகை விட்டு உதிர்ந்தது என்று குறிப்பிட்டு, கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கலைஞர் யுவராஜா என்பவர்,  காய்ந்த இலையில் சரோஜாதேவி படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

கன்னடம், தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது மறைவிற்கு அரசியல் தலைவர்கள் உட்பட அனைவரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த யு.எம். யுவராஜா என்ற கலைஞர், சரோஜாதேவி மறைவையொட்டி அஞ்சலி செலுத்தும் விதமாக, உலகை விட்டு உதிர்ந்தது என்று குறிபிட்டு, காய்ந்த இலையில் அவரது படத்தை வரைந்து அஞ்சலி செலுத்தினார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *