திமுகவில் இருந்து சீனியர் அரசியல்வாதியான வைத்திலிங்கம் எம்.எல்.ஏ தவெகவில் ஐக்கியமாகிறார் என டெல்டாவில் இருந்து காற்று வீசுவது குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு…
தமிழக அரசியல் களத்தைப் பொறுத்தவரை செல்வாக்கு மிக்க நபர்கள் ஒரே கட்சியில், தொடர்வது என்பது அரிதிலும் அரிது. எப்போதெல்லாம், ஆட்சி மாற்றங்கள் நிகழ்கிறதோ, அப்போதெல்லாம் கட்சி தாவல்களும் நடப்பதுண்டு. அட…. தவெக ஆட்சிக்காக கூட்டணியில் இருந்தே கட்சிகள் வெளியேறிய மாற்றங்களையும் பார்த்தோம்.
அதையும் தாண்டி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றஅதிமுக எம்.எல்.ஏக்கள் மதுராந்தகம் மரகதம் குமரவேல், பெருந்துரை ஜெயக்குமார், தாராபுரம் சத்யபாமா, அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா, விராலிமலை டாக்டர் சி.விஜயபாஸ்கர், கரூர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இதில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மீண்டும் மரகதம் குமரவேலும், சத்தியபாமாவும் தவெக எம்.எல்.ஏக்களாக களமிறங்கி வெற்றி பெற்றதெல்லாம், இந்த தமிழ்நாட்டுக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வியை எழுப்பியதெல்லாம் வேறு கதை..
இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கும் டெல்டா மாவட்டத்துக்காரரான ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ , ஆர். வைத்திலிங்கம் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாக செய்திகள் சுழன்றடிக்கின்றன. அதிமுகவின் சீனியர், முன்னாள் அமைச்சர், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவர் என அதிமுகவின் மிக முக்கியமானவராக இருந்தவர்தான் வைத்திலிங்கம்.
அதிமுகவில் அசைக்கமுடியாத சக்தியாக இருந்த வைத்திலிங்கம், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், அதிமுகவில் சசிகலாவா ஓ.பன்னீர்செல்வமா என்கிற நிலை வந்தபோது, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் அணிவகுத்தார். அதன் பின்னர் அதிமுக எடப்பாடி பழனிசாமியின் கைகக்குப் போய், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட்டபோதும் ஓபிஎஸ்ஸின் தூணாகவே நின்றார் வைத்திலிங்கம்.
அந்த இரட்டைத் தலைமைகளுக்கிடையே சண்டை வந்து, ஓ.பி.எஸ் வெளியேற்றப்பட்டபோதும் வைத்திலிங்கம் ஓ.பன்னீர்செல்வத்துக்கு துணையாகவே தொடர்ந்தார். இந்த நேரத்தில்தான், வைத்திலிங்கம் அதிமுக அமைச்சராக இருந்த காலகட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு பதியப்பட்டது.
2011 முதல் 2015 வரையிலான அ.தி.மு.க., ஆட்சியில் வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், கடந்த 2015ல், சென்னையில், ஸ்ரீராம் குழும நிறுவனம், 57புள்ளி 94 ஏக்கரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட அனுமதி அளித்தார். இதற்காக, வைத்திலிங்கத்தின் மகன் நிர்வகித்த ‘முத்தம்மாள் எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்திற்கு, ஸ்ரீராம் குழுமத்தின் கெமிக்கல்ஸ் நிறுவனம் வாயிலாக, 27
கோடியே 90 இலட்சம் ரூபாய் பரிமாற்றம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக, தி.மு.க., ஆட்சியின்போது, கடந்த 2024ல், ‘அறப்போர் இயக்கம்’ சார்பில், லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, ஐந்து பிரிவுகளின் கீழ், வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு ஒரு பக்கம் அச்சுறுத்த, ஓ.பன்னீர்செல்வத்தின் பின்னால் தொடர்ந்து எந்தப் பயனும் இல்லை என்பதும் தெளிவாகி விட, ஜனவரி 2026-இல் திமுக தலைரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து தன்னை திமுகவில் ஐக்கியப்படுத்திக் கொண்டார்.
அதற்கு முன்னதாக சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்.எல்.ஏ பதவியையும் ராஜினாமா செய்து விட்டார்.
வைத்திலிங்கம் எதிர்பார்த்தபடியே திமுவில் அவர் இணைந்ததை அடுத்து அவர் மீதான வழக்கை மூட லஞ்ச ஒழிப்புத்துறை மனுதாக்கல் செய்தது. ஆனால், அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வைத்திலிங்கம் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டு, மூன்று மாதம் அவகாசம் வழங்கியது.
வைத்திலிங்கம் எதிர்பார்த்தபடியே திமுவில் அவர் இணைந்ததை அடுத்து அவர் மீதான வழக்கை மூட லஞ்ச ஒழிப்புத்துறை மனுதாக்கல் செய்தது. ஆனால், அறப்போர் இயக்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வைத்திலிங்கம் மீதான விசாரணையை மீண்டும் தொடங்க உத்தரவிட்டு, மூன்று மாதம் அவகாசம் வழங்கியது.
இந்தச் சூழலில், நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் அதே ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்ட வைத்திலிங்கம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் டாக்டர் கே.அரவிந்தை விட 35,028 வாக்குகள் முன்னிலை பெற்று வெற்றி பெற்றார். இந்தநிலையில்தான், வைத்திலிங்கம் தமிழக வெற்றீக் கழகத்தில் இணைய உள்ளதாக டெல்டா தகவல்கள் தெரிவிக்கின்ரறன.
அதற்கு காரணம் தன் மீதான வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வராமல் நீர்த்துப் போகச் செய்யத்தான் என்கிறார்கள் டெல்டா அரசியல்வாதிகள். தேர்தலில் தோல்வி அடைந்த தவெக வேட்பாளரும் தவெக மருத்துவர் அணி நிர்வாகியுமான டாக்டர் கே.அரவிந்த், எப்படியாவது வைத்திலிங்கத்தை வீழ்த்தவேண்டும் என முனைப்பு காட்டி வருகிறார்.
இதற்காக அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராமனை சந்தித்து, , ‘முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீதான வழக்கில், த.வெ.க., அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும், என நம்பிக்கை அளித்துள்ளதாகவும் வழக்கை துரிதப்படுத்தி நடத்த உதவி செய்வதாகவும் தெரிவித்துள்ளதாகவும் கூர்றப்படுகிறது.
இதே வழக்கில் இருந்து தப்பிக்கத்தான் திமுக ஆட்சியில் திமுகவில் இணைந்தார். இப்போது தவெக ஆட்சியில் தவெகவில் இணையப் போகிறார் வைத்திலிங்கம் எனத் தகவல் வெல்ளியாகி உள்ளது. அரசியல்ல கட்சி மாறுவதெல்லாம் சாதாரணமப்பா…
இதுபோன்ற பல்வேறு சுவாரஸ்யமான அரசியல் செய்திகளுக்காக ஜெம் தொலைக்காட்சியுடன் இனைந்திருங்கள்..


