அம்மா உணவகங்களுக்குப் புத்துயிர் ஊட்டிய முதல்வர் விஜய்..TTV புகழாரம்.!

Advertisements

தமிழகத்தில் எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் உன்னதத் திட்டமாகத் தொடங்கப்பட்ட ‘அம்மா உணவகங்கள்’ கடந்த சில காலமாகச் சரியான பராமரிப்பின்றி, பல்வேறு இடங்களில் முடங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தன. இந்நிலையில், ஏழை எளிய தொழிலாளர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை உடனடியாகச் சீரமைத்துப் புதுப்பிக்க முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

அரசியல் மாச்சரியங்களைக் கடந்து, ஏழைகளின் பசி போக்கும் இந்த மக்கள் நலத் திட்டத்திற்குப் புத்துயிர் ஊட்டியுள்ள முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்குப் பல்வேறு அரசியல் தலைவர்களும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். ‘அம்மா உணவகங்களின் அவசியத்தை உணர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களை சீரமைக்க முதலமைச்சர் திரு.ஜோசப் விஜய் அவர்கள் பிறப்பித்திருக்கும் உத்தரவை மனதார வரவேற்கிறேன் என்று TTV தினகரன் தெரிவித்துள்ளார்..

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதலே, எளிய மக்களுக்கான திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வரும் திரு. ஜோசப் விஜய், “அம்மா உணவகங்கள் தொடர்ந்து தொய்வின்றிச் செயல்பட வேண்டும். தரமான உணவு விநியோகம் எக்காரணம் கொண்டும் தடைபடக் கூடாது” என அதிகாரிகளுக்குக் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். தேவையான நிதி ஒதுக்கீட்டுடன், அனைத்து உணவகங்களையும் உடனடியாகச் சீரமைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *