
நேற்று (30ஆம் தேதி) தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில் அடுத்து அவர் எங்கு பிரச்சாரம் மேற்கொள்கிறார் எனும் தகவல் வெளியாகியுள்ளது.அதனைத் தொடர்ந்து பெரம்பூரில் தனக்கும், கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் பாபுவுக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்நிலையில் விஜய், தான் இரண்டாவதாக போட்டியிடும் திருச்சி கிழக்கு தொகுதியில் வரும் ஏப்ரல் 2ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து அங்கே அவர் பிரச்சாரம் மேற்கொள்ளவும் தவெக அனுமதி கோரியிருக்கிறது.
ஏப்ரல் 2ஆம் தேதி தவெக தலைவர் விஜய், திருச்சி வருகைக்கு அனுமதி கோரி அக்கட்சி நிர்வாகி செங்கோட்டையன் திருச்சி மாநகர் காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.திருச்சியில், பாலக்கரை, மரக்கடை உள்ளிட்ட நான்கு இடங்களில் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார் என சொல்லப்படுகிறது. இதற்காகவும் தவெக நிர்வாகி திருச்சி காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளார்.




