ரிலீஸுக்கு முன்பே விஜயின் ‘ஜனநாயகன்’ வசூல் சாதனை… எவ்வளவு தெரியுமா?

Advertisements

ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பிரகாஷ் ராஜ், பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்‌ஷன் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.இந்தப் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், சென்சார் பிரச்சினையால் படம் வெளியாகவில்லை. இதனிடையே படம் சட்டவிரோதமாக இணையதளங்களில் வைரலானது.படம் வெளியாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், நாளை தமிழகம் முழுவதும் 1000-க்கும் அதிகமான திரைகளில் படம் வெளியாக உள்ளது.விஜயின் கடைசி படம் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனால் டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாளை படம் வெளியாக உள்ள நிலையில், இதுவரை டிக்கெட் முன்பதிவில் மட்டும் ரூ.40 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் மட்டும் ரூ.15 கோடியையும், உலக அளவில் ரூ.30 கோடியையும் முன்பதிவில் மட்டும் படம் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.150 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. டாப் வசூலாக உள்ள நிலையில், அதனை ‘ஜனநாயகன்’ முறியடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது..

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *