Venice Bus Accident: 21 பேர் பலி!

இத்தாலி வெனிஸ் நகரத்தில் பேருந்து விபத்தில் 21 பேர் பலி!

இத்தாலி வெனிஸ் நகரத்தில் பேருந்து பாலத்தின் மீதிருந்து கவிழ்ந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில்  21 பேர்  பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்தில் மொத்தம் 40 பேர் பயணம் செய்ததாகவும், பேருந்து  பாலத்திலிருந்து கவிழ்ந்து விழுந்ததில் அதில் 21 பேர் இறந்ததாகவும், 18 பேர் காயமுற்றதாகவும், வெனிஸ் நகரத்தின்  மேயர் ரொனாலொ பொராசோ தெரிவித்துள்ளார்.

மேலும் இவ்விபத்துபற்றிக் கூறுகையில், இறப்பு எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும், சிகிச்சை பெறுவோர்களில் பலர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.பேருந்து 50 அடி பள்ளத்தில்  விழுந்த்தில், 7.45 மணியளவில் தீப்பிடித்ததாகவும், அப்பேருந்தில்  ஐந்து உக்ரைன், மற்றும் 1 ஜெர்மனி நாட்டைச், சேர்ந்தவர்கள் என்றும்  உள்ளூர் அதிகாரி மைக்கேல் டி பாரி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

வெனிஸ் மேயர், இதுகுறித்து தமது முகநூலில், மிகவும் ஆபத்தான விபத்து, நாட்டு மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாகத் தெரிவித்தார். இத்தாலி பிரதம மந்திரி, ஜியோர்ஜியா மெலோனி, தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். விபத்துக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *