எதை வேண்டுமானாலும், எதை கொடுத்தும் வாங்கி விடாலாம் என நினைக்கிறார்கள், இவர்களுகெல்லாம் தக்கப்பாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு மறைமுகமாக சாடினார்.
சென்னை வில்லிவாக்கம் அருகே அயனாவரம் தந்தை பெரியார் நகரில் திமுக தேர்தல் பணிமனையை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார். இதில், சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன், தொகுதி பொறுப்பாளர் நாகலிங்கம் உள்ளிட்ட கூட்டணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பேசிய அவர் வில்லிவாக்கத்தில் 255 பாகங்களில் ஒரு இலட்சத்து 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இதில் பெண் வாக்காளர்கள் தான் அதிகமாக உள்ளனர். எனவே வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு முறையை தவிர அனைத்து முறையும் திமுக தான் வென்றுள்ளது என்று தெரிவித்தார்.
தொடர்ந்து, பலர் அதிகார ஆசையோடு எதை வேண்டுமானாலும், எதை கொடுத்தும் வாங்கி விடாலாம் என நினைக்கிறார்கள். ஆனால் இது வந்தாரை வாழவைக்கும் தமிழகம் அனைவரையும் மதிக்கவேண்டும் இவர்களுகெல்லாம் தக்கப்பாடம் வில்லிவாக்கத்தில் புகட்டப்படும் என்று மறைமுகமாக சாடினார்.


