Chennai Gold rate:அதிரடியாக குறைந்த தங்கம் விலை..இன்றைய விலை நிலவரம் என்ன?

Advertisements

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.

சென்னை:தங்கம் விலை கடந்த மாதம் கிடுகிடுவென அதிகரித்து ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்தது. இதனால் நடுத்தர மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு எட்டாக் கனியாகிவிடும் என்று நினைக்கத் தோன்றும் அளவுக்குத் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது. இந்த நிலையில், 2024-25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினத்திற்கான இறக்குமதி வரி 12 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்படும் என மத்திய நிதி மந்திரி அறிவித்தார். பட்ஜெட் எதிரொலியாகக் கடந்த சில நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வந்தது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ560 குறைந்து ரூ.51,200-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 2-வது நாளாகத் தங்கம் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.50,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.6,330-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.87-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு 1,120 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *