விசிகவில் வெடித்த பூகம்பம்.. ஆதவிடம் திருமா வைத்த செக்..!

தவெக ஆட்சியமைக்க ஆதரவு கொடுத்த விசிக, அதுக்கப்புறம் அமைச்சரவையிலும் இணைஞ்சுக்கிட்டது. விசிக எம்எல்ஏ வன்னி அரசு அமைச்சராகவும் பொறுப்பேத்துக்கிட்டார். விசிக முதல்முறையா கூட்டணி ஆட்சியில பங்கேற்றதால, கட்சியினர் செம உற்சாகத்துல இருந்தாங்க. இதனாலதான் தவெக கூட்டணியில விசிக இணைஞ்சதுன்னும் சொல்லப்பட்டது. இப்போ தவெக தலைமையிலான கூட்டணிக்கு அதிகாரப்பூர்வமா மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி என்று பெயரும் வைக்கப்பட்டிருக்கு.

ஆனா, கடந்த சில நாட்களாவே விசிகவோட இரண்டாம் கட்ட தலைவர்களுக்குள்ள பெரிய மோதல் வெடிச்சிருக்கு. அதாவது, அமைச்சர் பதவியோட சேர்த்து ஒரு வாரியத் தலைவர் பதவியையும் விசிகவுக்கு கொடுக்க தவெக தரப்புல இருந்து சொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியிருக்கு. இந்த வாரியத் தலைவர் பதவிதான் இப்போ விசிகவுக்குள்ள புது பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டிருக்குன்னு சொல்லப்படுகிறது.

தாட்கோ வாரியத் தலைவர் பதவிக்கு ஆட்களை நியமிக்கலாம் என முடிவு எடுக்கப்பட்டதும், விசிகவுக்குள் அடுத்த ‘பதவி பஞ்சாயத்து’ ஆரம்பமாகிவிட்டதாக சொல்லப்படுகிறது. ஒருபக்கம் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனக்கு நெருக்கமான ஒருவரின் பெயரை கைகாட்டியிருக்கிறார். மறுபக்கம் அமைச்சர் வன்னி அரசு தரப்பிலும் ஒரு பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. இதற்கிடையே விசிக தலைவர் திருமாவளவனோ, சிந்தனைச் செல்வன் பெயரை முன்வைத்திருக்கிறார்.

அவ்வளவுதான்… கட்சிக்குள் ‘யாருக்கு அந்த நாற்காலி?’ என்ற போட்டி சூடுபிடித்துவிட்டதாக கூறப்படுகிறது.குறிப்பாக வன்னி அரசு – சிந்தனைச் செல்வன் இடையே மோதல் வெடித்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. ஏற்கனவே எம்எல்ஏவாக இருந்துவிட்டார்… கட்சியிலும் முக்கியப் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது… அப்படியிருக்க மீண்டும் வாரியத் தலைவர் பதவியும் ஏன்? என்று வன்னி அரசு தரப்பில் சிலர் முணுமுணுத்ததாக கூறப்படுகிறது.

இதனால் டென்ஷனான சிந்தனைச் செல்வன், நேரடியாக மோதாமல்… எக்ஸ் பக்கத்தில் அடுத்தடுத்து சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிடத் தொடங்கியதாக சொல்லப்படுகிறது. பதவி ஒன்று… போட்டியாளர்கள் பலர்… பதிவுகள் வேறு லெவல். விசிகவுக்குள் இந்த ‘வாரிய நாற்காலி’ விவகாரம் இன்னும் எங்கே போகிறது என்பதுதான் இப்போது ஹாட் டாபிக்.இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வந்த திருமாவளவன், எங்கள் கட்சிக்கு வாரியத் தலைவர் பதவியே வேண்டாம்  என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஏற்கனவே பதவிக்காக காத்திருந்த சிறுத்தைகள் கடும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ஒரு பதவியைச் சுற்றி இத்தனை பஞ்சாயத்தா என்ற ரீதியில் கட்சிக்குள்ளேயே சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.அதுமட்டுமல்ல… கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்தே கட்சிக்குள் எழும் அடுத்தடுத்த பிரச்சினைகளை சமாளிப்பதே திருமாவளவனுக்கு பெரும் தலைவலியாகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேச்சு. ஒருபக்கம் கூட்டணி ஆட்சி… மறுபக்கம் பதவி போட்டி…

இன்னொரு பக்கம் கட்சிக்குள் கருத்து மோதல்… இப்படி மூன்று பக்கமும் ‘டென்ஷன்’ எகிற, திருமாவளவனுக்கு விசிகவை சமாளிப்பதே பெரும் சவாலாகி வருகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *