
திமுக காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளதாகவும், அதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாக உள்ளதாகவும், அதில் எந்தக் குழப்பமும் இல்லை என்றும் தெரிவித்தார்.
அரசியல் கட்சிக்கு வரும் கூட்டங்களை வைத்தோ அல்லது ஒரு நடிகருக்கு வரும் கூட்டத்தை வைத்தோ வெற்றி தோல்வியை நிர்ணயிக்க முடியாது என்றும், தேர்தலில் யாரை வெற்றிபெறச் செய்வது என்று மக்கள்தான் தீர்மானிக்க முடியும் என்றும் திருநாவுக்கரசர் கூறினார்.




