விசிகவைவிட தேமுதிகவிற்கு அதிகம்? திமுக பிளான் என்ன..!!

Advertisements
தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னெச்சரிக்கையாக, திமுக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் கேட்டு, திமுக தலைமையிடம் சமரசம் நாடி வருகின்றது. திருமாவளவன் நேரில் மு.க. ஸ்டாலினை சந்தித்து, கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் தொகுதிகள் தேவை என வலியுறுத்துகிறார்.
தற்போது விசிகக்கு 6 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கலாம் என திமுக தலைமை கூறி, பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெறுகின்றன. இந்த சூழலில், கூட்டணி கட்சிகளுக்கும் பங்கீடு வழங்கும் முடிவு இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடுப் பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது.இந்த சூழலில் தான்  திமுக கூட்டணியில் இடம்பெற்று இறுக்கின்ற விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 10 தொகுதிகள் கேட்டு வருகிறதாம். விசிக 10 தொகுதிகளில் போட்டியிடக்கூடிய அளவிற்கு பலமான கட்சி என்பதை திமுக தலைமையும் ஏற்கிறதாம்.
ஆனால் இப்பொழுது இருக்ககூடிய சூழலில் அவ்வளவு ஒதுக்க முடியாது என்றும் விசிகவுக்கு 6 தொகுதிகள் கொடுக்கலாம் என திமுக தலைமை கூறுகிறதாம். திருமாவளவனின் கட்சிக்கு 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்படலாம் என்றே தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இம்முறை தனது அரசியல் வளர்ச்சியை முன்னிறுத்தி 10 தொகுதிகளை வேண்டும் என்று திமுக தலைமையிடம் கேட்டுள்ளதாம்.
குறிப்பாக செல்லவேண்டம் என்றால், வட மாவட்டங்களில் தங்களுக்குச் செல்வாக்கு அதிகரித்துள்ளதாக விசிக தரப்பு வாதிடுகிறது. அக்கட்சியின் தலைவர் திருமாவளவன், “கட்சியின் வளர்ச்சிக்கு ஏற்ப கூடுதல் இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்கிறாராம். ஆனால், திமுக தரப்போ கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் மற்றும் தேமுதிக போன்ற புதிய கட்சிகள் இணைந்துள்ளதைச் சுட்டிக்காட்டி, போனமுறை வழங்கிய 6 தொகுதிகளையே இம்முறையும் வழங்க முன்வந்துள்ளதாம்.

கூடுதல் தொகுதிகளை ஒதுக்கினால் மற்ற கூட்டணிக் கட்சிகளும் அதேபோல் கேட்கும் என்பதால், திமுக தலைமை விசிகவிற்கு 6 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது என்று கறரா காட்டி வருகிறதாம்..நேற்றே கூட்டணி இறுதி செய்திருக்க வேண்டியது. ஆனால், திமுக தரப்பில் அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எ.வ.வேலு இவர்கள் இரண்டு போரும் விசிக நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். குறைந்தபட்சம் 8 இடங்களையாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் விசிக நிர்வாகிகள் முனைப்பு காட்டி வருகிறார்கள்.

சட்டமன்ற தேர்தல் தொடர்பான நேர்காணல் பணிகள் வருகிற 22-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த சூழலில் தான் விசிகவுடனான தொகுதிப் பங்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர திமுக தலைமை திட்டமிட்டுள்ளது. திருமாவளவன் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் இடையேயான நேரடி சந்திப்பிற்குப் பிறகு இந்த இழுபறி முடிவுக்கு வரும் என விசிகவினர் நம்புகிறார்கள்.இன்று மாலைக்குள் விசிக தொகுதி பங்கீடு இறுதியாகும் எனறு தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதேநேரம் விசிகவைவிட தேமுதிகவிற்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. 8 தொகுதிகள் வரை தேமுதிகவிற்கு திமுக வழங்க வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஏற்கனவே ராஜ்யசபா சீட்டும் திமுக தேமுதிகவிற்கு வழங்கி இருக்கிறது.இன்று அல்லது நாளைக்குள் தேமுதிக தொகுதிகள் உறுதியாகும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்பொழுது இருக்க கூடிய சூல்நிலையில் திமுக கூட்டணி கட்சிகளுக்கு 43 தொகுதிளை ஒதுக்கி உள்ளது. இன்னும் 20 தொகுதிகள் வரை கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என செல்லப்படுகிறது. அதில் குறிப்பா உதயசூரியன் சின்னமும் தரப்படும் என்றும் கூறப்படுகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *