Vatakara: காதலனுடன் மனைவி ஓட்டம், கணவன் மது – பிரியாணி விருந்து!

காதலனுடன் மனைவி ஓட்டம், கணவன் மது, பிரியாணி விருந்து.

கள்ளக்காதலனுடன் மனைவி ஓடியதால் கணவன் தனது நண்பர்களை அழைத்து மது பிரியாணி விருந்து கொடுத்து ஆடி பாடிய வீடியோ காட்சிகள் வைரல் ஆகி வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள வடகரா என்ற இடத்தைச் சேர்ந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னால் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணம் செய்த மறுநாள் முதலே கணவன் மனைவி இருவருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது
இந்த நிலையில் அவரது மனைவி  சமீப காலமாக வேறு ஒருவருடன் போனில் அடிக்கடி பேசிக்கொண்டிருந்தார். இதைக் கணவன் தட்டி கேட்டார் இருந்தபோதிலும் அவர் அதைக் கேட்காமல் தொடர்ந்து போனில் பேசி வந்தார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக அவர் கள்ளக்காதலனுடன் ஓடி விட்டதாகத் தெரிகிறது.
அன்றைய தினம் வேலைக்குச் சென்று வீடு திரும்பிய கணவனுக்கு இந்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. அன்றுஇரவு முழுவதும் மிகுந்த மன உளைச்சலில் இருந்தார் பின்னர் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, மறுநாள் காலையில் 250 நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தார் அவர்கள் அனைவருக்கும் வீட்டில் மது விருந்து படைக்கப்பட்டது மட்டன் சிக்கன் பிரியாணியும் தயார் செய்து கொடுத்தார் அனைவரும் மது அருந்திவிட்டு பிரியாணி சாப்பிட்டுவிட்டு ஆட்டம் போட்டனர்.
இந்தக் காட்சிகளை அங்கு ள்ளவர்கள் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்துள்ளனர் இந்த வீடியோ இந்தியா முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *