Vande Bharat Express: தி.மு.க அமைச்சருக்குக் கேக் உட்டிய தமிழிசை!

வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்ட மகிழ்ச்சியை பகிரும் வகையில் மதுரை ரயில் நிலையத்தில்    அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு புதுவை ஆளுநர்  தமிழிசை சவுந்தரராஜன்கேக்கை உட்டிவிட்டு மகிழ்ச்சியை பரிமாறினர்.

நெல்லையிலிருந்து மதுரை வழியாகச் சென்னை வந்தே பாரத் ரயில் சேவை நேற்று  முதல் தொடங்கியுள்ளது. வந்தே பாரத் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாகத் தொடங்கி வைத்தார். நெல்லையிலிருந்து புறப்பட்ட ரயிலில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாடு சட்டமன்ற பாஜக குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் பயணம் செய்தனர். தமிழிசை ரயில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டார்.

அடுத்த சில மணி நேரத்தில் ரயில் மதுரை ரயில் நிலைய சந்திப்பை வந்தடைந்தது. அங்கு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் மற்றும் பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோர் வந்தே பாரத் ரயில் பெட்டி வடிவிலான கேக்குடன் காத்திருந்தனர்.

ரயிலிலிருந்து மதுரையில் இறங்கிக் கொண்ட தமிழிசை சவுந்தரராஜன், அவர்களுடன் இணைந்து கேக் வெட்டினார். அதன்பிறகு அங்கிருந்த அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு கேக்கை ஊட்டிவிட்டார். பிறகு அங்கிருந்தவர்கள் கேக்கை பகிர்ந்து உட்டிவிட்டுக்கொண்டு மகிழ்ச்சியை பரிமாறினர். இதனைத் தொடர்ந்து ரயில் புறப்பட்டுச் சென்னையை நோக்கிச் சென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *