R. Nallakannu: எதற்காக ஆளுநராக ஆர் என் ரவி இருக்கிறார் என்று புரியவில்லை!

வகுப்புவாத இயக்கத்தை ஆதரிப்பதற்கும் முற்போக்கு இயக்கத்தை முறியடிப்பதற்கும்தான் ஆர் என் ரவி ஆளுநராக இருக்கிறார் என்றும் நாட்டை பாதுகாப்பதற்கான நோக்கம் அவரிடம் இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.

75வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதில் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கலந்து கொண்டு கொடி ஏற்றினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நல்ல கண்ணு,

குடியரசை காப்பாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. மதவெறி சக்திகளுக்கு எதிராக முற்போக்கு சிந்தனைகள் மூலம் முறியடிக்க வேண்டும். ஜனநாயக சக்தி ஒன்று பட உறுதிமொழி ஏற்போம். விடுதலைப் போராட்டத்தின் லட்சியத்தை பாதுகாக்க உறுதிமொழி எடுக்க வேண்டும்..

*சுதந்திரப் போராட்டத்தில் காந்தியின் பங்கு குறித்து ஆளுநர் பேசிய கருத்து தொடர்பான கேள்விக்கு ?

எதற்காக அவர் ஆளுநராக இருக்கிறார் என்று புரியவில்லை. வகுப்புவாத இயக்கத்தை ஆதரிப்பதற்கும் முற்போக்கு இயக்கத்தை முறியடிப்பதற்கும்தான் அவர் ஆளுநராக இருக்கிறார். நாட்டை பாதுகாப்பதற்கான நோக்கம் அவரிடம் இல்லை.

ராமர் கோவில் கட்டியது தொடர்பான கேள்விக்கு?

மத வெறியை தூண்டுவதற்கு தான் இவ்வாறு செயல்படுகிறார்கள். நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு பதிலாக இத்தகைய செயல்கள் மூலம் மத வெறியை வளர்க்கிறார்கள்,நல்ல கண்ணுகூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *