Kanchipuram:ஆண் நண்பர்களுடன் நெருங்கிப் பழகிய நர்சிங் மாணவி கர்ப்பம்!

Advertisements

ஆசை வார்த்தை கூறி நர்சிங் மாணவியைக் கர்ப்பிணியாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சீபுரம்:காஞ்சீபுரம் மாநகராட்சி பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. டிப்ளமோ நர்சிங் படித்து வருகிறார். நர்சிங் பயிற்சி மையத்திற்கு சென்று வரும் வழியில் சிறுமியுடன் சிறு காவேரிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த குலசேகரன் (26), வெங்கட், ஒலிமுகமது பேட்டை பகுதியைச் சேர்ந்த ரித்தீஷ் (21) ஆகிய ஆட்டோ டிரைவர்கள் 3 பேர் நண்பர்களாகப் பழகி வந்தனர்.

சிறுமியுடன் நெருங்கிப் பழகிய ஆண் நண்பர்கள் 3 பேரும் அடிக்கடி சிறுமியை வெளியில் அழைத்துச் சென்று ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்தனர். இதன் காரணமாகச் சிறுமி கர்ப்பம் அடைந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் காஞ்சீபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குலசேகரன், ரித்தீஷ் ஆகியோரை போக்சோ வழக்கில் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய வெங்கட் என்பவரைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *