Vadavalli: பெண்கள் குளிக்கும்போது வீடியோ!!

பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த வாலிபர் சிக்கினார்!

பெண்கள் குளிக்கும்போது வீடியோ எடுத்த வாலிபரைப் பொதுமக்கள் மடக்கி பிடித்துப் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

வடவள்ளி: கோவை வடவள்ளியை சேர்ந்தவர் 38 வயது பெண்.இவர் கூலி வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் குடும்பத்துடன் வெளியூருக்கு சென்று விட்டு வீட்டுக்குச் சென்று கொண்டு இருந்தார். அப்போது பெண் வீட்டில் உள்ள குளியல் அறை அருகே வாலிபர் ஒருவர் செல்போனுடன் நின்று கொண்டு இருந்தார். பெண்ணைப் பார்த்ததும் வாலிபர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார்.

இதனைப் பார்த்த பெண் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அந்த வாலிபரை மடக்கி பிடித்தார். வாலிபர்மீது சந்தேகம் அடைந்த பெண் அவர் பயன்படுத்திய செல்போனை வாங்கி பார்த்தார். அதில் தான் குளிக்கும் வீடியோ இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

மேலும் அந்த வாலிபரின் செல்போனில் அக்கம் பக்கத்தில் குடியிருக்கும் பெண்களின் குளியல் வீடியோ காட்சிகள் இருந்தது.இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பெண் இதுகுறித்து வடவள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாகப் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் வாலிபரைக் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 21) என்பது தெரிய வந்தது. இவர் அந்தப் பகுதியில் குடியிருக்கும் பெண்கள் குளிக்கச் செல்லும்போது அதனை மறைந்து இருந்து வீடியோ எடுத்து ரசித்தது தெரிய வந்தது.

அவரது செல்போனில் 10-க்கும் மேற்பட்ட பெண்கள் குளிக்கும் வீடியோ காட்கிகள் மற்றும் புகைப்படங்கள் இருந்தது. இதனைப் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட சந்தோஷை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *