திருவனந்தபுரத்தில் கடற்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி..!

Advertisements

திருவனந்தபுரத்தில் கடற்படையினரின் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் டிசம்பர் 3ஆம் தேதி கடற்படை தினத்தை முன்னிட்டு இந்திய விமானப்படைதின சாகச நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில், குடியரசுதலைவர் திரௌபதி மூர்மு உட்பட பல்வேறு முக்கிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இதற்கான ஓத்திகைப் பயிற்சினை சங்குமுகம் கடற்கரையில் கடற்படையினர் தொடங்கியுள்ளனர். இதையடுத்து வாரவிடுமுறையையடுத்து சாகசத்தைக் காண சுற்றுலாபயணிகள் மற்றும் பொதுமக்கள் குவிந்தனர். இது குறித்து திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த வித்யா என்பவர் பேசியபோது,  முதன்முதலாக தங்கள் பகுதியில் நமது நாட்டின் கடற்படை வீரர்களின் சாகசங்களை நேரில் காண வாய்ப்பு வழங்கியதற்காக கடற்படைக்கு நன்றி தெரிவித்தார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *